ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு பயன்படும் முக்கிய ஆவணம் பாஸ்போர்ட் ஆகும். தற்பொழுது நாட்டின் சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக பாஸ்போர்ட் மட்டும் போதும் விசா தேவை இல்லை என்று ஒவ்வொரு நாடும் அறிவிப்பு வெளியிட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில் உலக அளவில் எந்த நாடு சிறந்த பாஸ்போர்ட்டை கொண்டிருக்கிறது என புள்ளி விவரங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் அடிப்படையில் நடைபெற்ற கணக்கெடுப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டுகள் முதலிடத்தை பிடித்த நிலையில் இந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்துள்ளன. இவை மட்டுமல்லாமல் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் இணைந்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் உலகில் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
எனவே இந்த நாட்டின் பாஸ்போர்ட்டுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டன. வரிசை பட்டியலில் இந்தியாவிற்கு எண்பதாவது இடம் கிடைத்துள்ளது. இந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் கணிசமாக முன்னேறி வருகின்றன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருப்பினும் சிங்கப்பூர் தொடர்ந்து தரவரிசை பட்டியலில் முன்னணியில் இருந்து வருகின்றது.