TamilSaaga

“சிங்போஸ்ட் மூலம் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை சேகரிப்பு” : அதிரடி சலுகையை வெளியிட்ட ICA – முழு விவரம்

சிங்கப்பூரர்கள் தங்கள் பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டையை (IC) சிங்க்போஸ்ட் விற்பனை நிலையங்களில் சேகரிக்கும் போது வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வசதியை வழங்குவதற்கான செலவை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA – Immigration & Checkpoint Authority) இன்று புதன்கிழமை (செப்டம்பர் 22) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், ICA-ன் குடிமக்கள் சேவை மையத்தின் இயக்குநர் மற்றும் மூத்த உதவி ஆணையர் டொமினிக் சுவா கூறியதாவது: “IC (Identity Card) மற்றும் பாஸ்போர்ட்களை தபால் அலுவலகங்களில் சேகரிப்பதை ஊக்குவிக்கும் இந்த முயற்சி, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை வழங்குவதற்காக ICAன் மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்.

Immigration & Checkpoint Authorityன் முகநூல் பதிவு

நாடளாவிய ரீதியில் நியமிக்கப்பட்ட 27 தபால் நிலையங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் ஆவணங்களை சேகரித்துக்கொள்ளலாம். தற்போது, ​​குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை அல்லது அடையாள அட்டையை சேகரிக்கும் போது 6 முதல் 12 வெள்ளி வரையிலான வசூல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இதற்கு முன்பு ICA உடனான பரிவர்த்தனைகளில் தோல்வியுற்ற “பயோமெட்ரிக் சரிபார்ப்பு” உள்ளவர்கள் தங்கள் ஆவணங்களை ICAவின் கட்டிடத்தில் தான் சேகரிக்க வேண்டும்.

ஆவணங்கள் சேகரிக்கத் தயாராக இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கிடைக்கும் சேகரிப்பு விருப்பங்களைப் பற்றி தெரிவிக்கப்படுவார்கள். தகுதியான குடியிருப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான தபால் நிலையத்தில் சேகரிக்க இந்த இணையதளத்தில் ஆன்லைன் மூலம் Appointment புக் செய்ய வேண்டும். பாஸ்போர்ட் புதுப்பித்தலின் அதிர்வெண்ணைக் குறைப்பதற்காக, அக்டோபர் 1 முதல் விண்ணப்பிப்பவர்களுக்கு சிங்கப்பூர் பாஸ்போர்ட்களின் செல்லுபடியாகும் காலம் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என்று மே மாதம் ICA அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts