TamilSaaga

சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு, இரண்டாம் காலாண்டில் குறைந்துள்ளது – என்ன காரணம்?

நடப்பில் இருக்கும் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு சதவிகிதம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இருப்பினும் வேலையின்மை விகிதங்கள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன என்று சிங்கப்பூரின் பிசினஸ் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. தற்போது நடப்பில் இருக்கும் இரண்டாம்கட்ட கட்டுப்பாடுகள் இதற்காக காரணமாக கூறப்படுகிறது.

2020ம் ஆண்டில் ஒரு வருட சரிவுக்குப் பிறகு மொத்த வேலைவாய்ப்பு முதல் காலாண்டில் உயர்ந்துள்ளது. ஆனால் மீண்டும் இரண்டாம் காலாண்டில் 15,700கக் குறைந்தது. இருப்பினும் குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு மெதுவாக உயர்ந்து வருவதால், குடியேற்ற வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வீழ்ச்சியை ஈடுசெய்துள்ளது.

சிங்கப்பூரில் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளால் உணவு, பான சேவைகள் மற்றும் சில்லறை வர்த்தகம் போன்ற உள்நாட்டு சார்ந்த துறைகளில் உள்ள சரிவுதான், குடியிருப்பு வேலைவாய்ப்பின் வளர்ச்சியை மெதுவாகக் குறைக்கிறது என்று MOM கூறுகிறது.

அதேசமயம் இதற்கு நேர்மாறாக, தகவல் மற்றும் தகவல் தொடர்பு போன்ற வெளிப்புற நோக்குடைய துறைகளில் வேலைவாய்ப்பு என்பது தொடர்ந்து வளர்ந்து வருகின்றது.

Related posts