சிங்கப்பூரில் கடந்த ஜூலை 14 அன்று இரவு நடந்த Toto டிராவின் இறுதிப் பரிசு S$ 8மில்லியனலிருந்து S$11.4 மில்லியனுக்கும் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்த drawவில் வென்ற இருவருக்கு இடையில் மேற்குறிய அந்த தொகை பிரித்துக்கொள்ளப்பட்டது.
முதல் பரிசான S$11,462,599 இருவரால் பிரித்துக்கொள்ளப்பட்டுள்ளது, அதாவது ஒரு நபருக்கு S$5,731,299 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த toto draw நாளை அதாவது ஜூலை மாதம் 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்று singapore pools தனது இணையத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தமுறை ஜாக்பாட் பரிசாக S$1,000,000 வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் UPI சேவை.. மனதார பாராட்டிய நம்ம சிங்கப்பூர் அமைச்சர் சண்முகரத்தினம் – வைரலாகும் வீடியோ
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த drawவில் S$5,665,884 என்ற தொகை தான் முதல் பரிசாக இருந்தது, ஆனால் அந்த பரிசை யாரும் வெல்லவில்லை. மாறாக 8 பேருக்கு தலா 76,000 வெள்ளி கிடைத்தது என்று Singapore Pools கூறியுள்ளது.
இந்நிலையில் நாளை நடக்கும் Drawவில் Group 1 பரிசு எவ்வளவு என்று விரைவில் அறிவிக்கப்படும். வழக்கம் போல மக்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்களை வாங்க ஆர்வமாக உள்ளனர்.