சிங்கப்பூரில் வேலைக்கு வந்திருக்கும் ஊழியர்கள் சம்பளம் நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவது தப்பில்லை தான். ஆனால் எந்த பாஸில் வேலைக்கு சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் இங்கு முக்கியமான விஷயமே. அப்படி தெரிந்து கொண்டால் சரியான பாஸினை தேர்வு செய்து அதற்கேற்ப சம்பளமும் வாங்க முடியும். இந்த பதிவினை தொடர்ந்து படிங்க சிங்கப்பூரில் இருக்கும் வொர்க் பாஸில் என்ன சம்பளம் கொடுப்பார்கள். அது இந்திய மதிப்பில் எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
PCM permit:
சிங்கப்பூர் தொழிற்சாலை அல்லது கப்பல் கட்டமான துறைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் இந்த பெர்மிட்டில் தான் வேலைக்கு வருவார்கள். இதில் படித்தவர்களும், அதே வேலையில் படிக்காதவர்களும் கூட சிங்கப்பூருக்கு வர முடியும். இந்த வேலைகளுக்கும் ஓடி இருக்கும். இதில் சம்பளமாக இந்திய மதிப்பில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை கிடைக்கும். சமையல் துறையில் வேலை செய்பவர்களுக்கு இந்த பெர்மிட்டில் வரும் போது 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கூட சம்பளம் அதிகமாக இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு வேலையின் அளவு அதிகமாக இருக்கும் என்பதே!
இதையும் படிங்க: குடும்ப கஷ்டத்திற்காக சிங்கப்பூரில் ஓயாத வேலை… 39 வயதில் நடக்க இருந்த திருமணம்… மயங்கி விழுந்த இடத்தில் உயிரிழந்த தமிழர்!
Work permit:
சிங்கப்பூரில் வேலைக்காக Skill testஐ முடித்து விட்டு அந்த அனுபவத்தில் வேலைக்கு வந்திருப்பார்கள். இவர்களுக்கு தான் கட்டாய ஓடி இருக்கும். இதன் மூலம் சம்பளமாக 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் இருக்கும். ஓடி அதிகமாகும் போது இதில் மாற்றம் இருக்கும். இவர்களுக்கு பெரிய அளவில் சம்பள பிடித்தம் இருக்காது என்பதால் தோராயமாக இதே மதிப்பில் தான் சம்பளம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
SPass:
வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டு இருக்கும் நபர்கள் படித்து டிகிரி அல்லது டிப்ளமோ வைத்து இருந்தால் இந்த பாஸில் வேலைக்கு வர முயற்சிக்கலாம். அதிகமான சம்பளம் கொடுக்கும் சிங்கப்பூர் பாஸில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மனிதவள அமைச்சக்கத்தின் கூற்றுப்படி இந்த பாஸில் வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு சம்பளமாக 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. பணி அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க இந்த சம்பளம் 3 லட்சம் வரை எட்டும்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு வரணுமா கண்டிப்பா இந்த course பண்ணணும்… Fail ஆனா நாடு திரும்ப வேண்டியது தான்
EPass:
சிங்கப்பூர் வேலைக்கு வர இரண்டு டிகிரி நல்ல பணி அனுபவம் இருப்பவர்கள் இந்த பாஸில் வேலைக்கு வரலாம். இந்த பாஸில் வேலைக்கு வரும் போது உங்களுக்கு அடிப்படை சம்பளமே 2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக 11 லட்சம் வரை கூட கொடுக்கப்படுகிறது. இது மனிதவள அமைச்சக்கம் கூறி இருக்கும் அடிப்படை சம்பளம்.
இன்னும் சில பாஸ்களும் சிங்கப்பூர் வேலைக்கு இருந்தாலும் அதிகப்படியாக பயன்பாட்டில் இருக்கும் பாஸ் என்னவோ இதுதான். இதை விட இருக்கும் மற்ற பாஸ்கள் எல்லாம் இன்னும் பல லட்சங்களை சம்பளமாக தரும் என்பதால் அதற்கேற்ப கல்வி தகுதி, அனுபவம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.