TamilSaaga

“உதவி என்றதும் கொட்டும் மழையிலும் களமிறங்கிய புலம்பெயர்ந்த தொழிலாளி” – சிங்கை உள்ளங்களை கொள்ளை கொண்ட Indian Hero

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகின்றது, அப்படி ஒரு நாள் பெய்த பலத்த மழையின் போது ஆழமான வடிகாலில் விழுந்த AirPod ஐ மீட்க ஒரு பெண்க்கு உதவியதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பல சிங்கப்பூரர்களின் இதயங்களை கொள்ளைகொண்டுள்ளார் என்று தன் கூற வேண்டும்.

முதலிரவில் கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.. மனைவிக்கு இருந்த “ஆணுறுப்பு” – நீதி கிடைக்க உச்ச நீதிமன்றம் வரை சென்ற இளைஞர்

டிக்டோக்கில் எலைன் லியு என்று அழைக்கப்படும் பெண் ஒருவர், நேற்று மார்ச் 15 அன்று நடந்த அந்த அற்புத சம்பவத்தின் வீடியோவை அவரது tiktokல் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ 1,50,000 பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகின்றது. நேற்று இந்த சம்பவம் நடந்தபோது லியு என்ற அந்த பெண், தான் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்ததாகவும், அப்போது தனது தலைமுடியை கோதியபோது அவர் காதிலிருந்து Airpodகள் தவறி அருகில் இருந்த வடிகாலில் விழுந்தது.

அப்போது அங்கிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரை அணுகி, அவர் தனது AirPodஐ வடிகாலில் வெளியே எடுத்துத்தருமானு தாழ்மையுடன் கேட்டுள்ளார். முகுல் என்று அவர் குறிப்பிட்ட அந்தத் தொழிலாளியும் சற்றும் யோசிக்காமல் அவருக்கு உதவ முன்வந்துள்ளார். பலத்த மழையிலும் அவருக்கு உதவி செய்திட சுமார் இரண்டு பேருந்து நிறுத்தங்களின் நீளம் கொண்ட அந்த வடிகால் இருந்த இடத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பே நடக்கவேண்டிய திருமணம் : தொற்றால் சிங்கப்பூரில் சிக்கிய தமிழக தொழிலாளர் – ஊரே வந்து வாழ்த்த ஜாம்ஜாமென இன்று திருமணம்

முகுல் அந்த கொட்டும் மழையிலும் வழுக்கும் அந்த வடிகாலில் இறங்கி அவரது Airpodஐ எடுத்து கொடுத்துள்ளார். அவருடைய உதவியால் மெய்சிலிர்த்துப்போன அந்த பெண், மகிழ்ச்சியில் அவரோடு ஒரு Selfie எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இந்த பதிவை கண்ட பலரும் அவருக்கு சிறந்த புலம்பெயர்ந்த தொழிலாளி விருது வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். மக்களின் கமெண்ட்களுக்கு பதில் அளிக்கும் வகையில் “அன்றைய தினம் அவரது பெயரையும் எண்ணையும் தான் குறித்து வைத்துள்ளதாகவும், அவருக்கு விருந்தளிக்க விரும்புவதாகவும்” லியு கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts