TamilSaaga

“போதைப்பொருள் வழக்கு” : கம்போடியா நாட்டில் கைதான சிங்கப்பூரர் – ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு

கம்போடியாவில் போதைப்பொருள் கடத்தியதாக 68 வயது சிங்கப்பூர் நபர் கைது செய்யப்பட்டு, அங்கு ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் நிலையில் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 25ம் தேதி கம்போடிய தலைநகர் புனோம் பென்னில் இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு Goh Seow Sian கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள் : கட்டாயமாக்கப்பட்ட PCR அல்லது RT-PCR சோதனை

கம்போடிய போலீசார் அந்நாட்டின் தலைநகரின் சாம்கர் மோன் மற்றும் துவோல் கோக் மாவட்டங்களில் அமைந்துள்ள வீடுகளில் இருந்து 24 கிலோ எடையுள்ள எக்ஸ்டசி, மெத்தம்பேட்டமைன் மற்றும் கெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கைப்பற்றினர். இந்த சோதனையில் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் மொபைல் போன்கள் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த லீ ஜியாங் ஃபோங் (27 வயது) மற்றும் கம்போடிய நாட்டைச் சேர்ந்த டேயிங் லீக் (60வயது) உள்பட 3 பேர் இந்த தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். கம்போடியாவின் தேசிய காவல்துறையின் பொது ஆணையர் கடந்த நவம்பர் 29 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், அவர்கள் புனோம் பென்னில் போதைப்பொருள் கடத்தியதாக நம்பப்படுகிறது என்று கூறினார். இறுதியில் சந்தேக நபர்கள் மூவருக்கும் போதைப்பொருள் வைத்திருந்தமை, கடத்தல் மற்றும் உற்பத்தி செய்ததாக அவர்கள் மீது நவம்பர் 30ம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். கோஹ், சரக்குகளின் மொத்த விற்பனையில் ஈடுபடும் கம்போடிய நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட இயக்குநராக இருப்பதாகவும், அவரது பதிவு செய்யப்பட்ட முகவரி செங்காங்கில் உள்ள ஒரு பிளாட் எனவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ST-யின் கூற்றுப்படி, சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகத்தை உதவிக்காக கோ அணுகவில்லை, ஆனால் அமைச்சகம் இந்த வழக்கை அறிந்திருக்கிறது என்று கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts