TamilSaaga

4.5 billion.. 8% அசுர வளர்ச்சி.. சிங்கப்பூரில் “Logistics” துறையில் எகிறும் வேலை வாய்ப்பு.. ஆயிரக்கணக்கில் குவியும் “Job Offers” – ஒரே வருடத்தில் கடனை அடைத்து “வாழ்க்கை Graph”ஐ உயர்த்துவது உறுதி!

உலக அளவில் தற்போது மீண்டும் சகஜ நிலை திரும்பி வரும் இந்த நேரத்தில் சிங்கப்பூர் உள்பட பல நாடுகள் தங்கள் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. சிங்கப்பூரை பொறுத்தவரை இந்த தளர்வுகள் E-Commerce துறையை மீண்டும் புத்துயிர் பெற வைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். இதனால் சிங்கப்பூரில் உள்ள Logistics நிறுவனங்கள் இங்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தயார்நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் Logistics வளர்ச்சி குறித்து Mordor Intelligence என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்தாய்வின்படி சிங்கப்பூர் சரக்கு மற்றும் தளவாட (Logistics) சந்தை இந்த 2022 முதல் 2027ம் ஆண்டுக்குள் 8% வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளது. சிங்கப்பூர் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகளாவிய தளவாட மையமாக அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

DHL, UPS மற்றும் DB Schenker போன்ற முன்னணி சர்வதேச தளவாட நிறுவனங்கள் சிங்கப்பூரை தங்கள் பிராந்திய தலைமையகமாக மாற்றியுள்ளன என்பது தான் தற்போது Highlight. அதேபோல சிங்கப்பூர் தங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகங்களைப் பாதுகாப்பதற்கும், எல்லை தாண்டிய தங்கள் தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் இணையப் பாதுகாப்புத் திறன்களை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடும்ப பிரச்சனை.. சிங்கப்பூரில் கடன் வாங்கிய வெளிநாட்டு ஊழியர்.. வீட்டுக்கு “Delivery Boys” அனுப்பி “Torture” கொடுத்த நபர் – இறுதியில் கைக்கொடுத்த சிங்கை முதலாளி

சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்கனவே அதன் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் தொழில்துறை மாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக Logistics துறையை வலுப்படுத்த பல திட்டங்களை நிறுவி வருகின்றது. கடந்த பிப்ரவரி 2021ல், சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங், சிங்கப்பூரை ஒரு பிராந்திய மற்றும் உலகளாவிய இ-காமர்ஸ் மையமாக மாற்றுவதற்கான புதிய யுக்திகள் கையாளப்படும் என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

இந்த வளர்ச்சிகள் எல்லாம் ஒருபுரம் இருக்க, சிங்கப்பூர் அரசாங்கம், உலகத் தரம் வாய்ந்த நகரமாகவும், ஆசியாவிற்கும் உலகிற்கும் இடையே முக்கியப் போக்குவரத்து மையமாகவும் தங்களது நாட்டின் நிலையைத் தக்கவைக்க போக்குவரத்து உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

“இதெல்லாம் சகஜம்டா தம்பி வா”.. 6 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமையை அனுபவித்த சிங்கப்பூரர் – “என்னுடைய தவறும் கொஞ்சம் இருக்கு”

சிங்கப்பூரை பொறுத்தவரை எல்லை கட்டுப்பாடுகள் தளர்வடைந்து வரும் அதே நேரத்தில் விமான நிறுவனங்கள், Logistics, Banking துறை என்று பல துறைகளில் பெரிய அளவில் வேலைப்புகள் உருவாகி வருகின்றது. அண்மையில் சிங்கை நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஒரு கருத்துக்கணிப்பில் கூட பல சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டு மனிதவளத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருப்பதை நம்மால் பார்க்கமுடிந்தது.

Logistics துறையில் 8 சதவிகித வளர்ச்சி என்பது மட்டுமல்லாமல் கணிசமான அளவில் நல்ல சம்பளமும் கிடைக்கும் என்பதால் வேலைக்கான விண்ணப்பங்கள் உலக அளவில் பல நாடுகளில் இருந்து குவிந்து வருகின்றது. Logistics துறையில் வேலைபார்க்க விரும்பும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றே கூறலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts