உங்களை வளர்த்துக்கொள்ள வொர்க் பெர்மிட் பெற நினைக்கும் நபரா நீங்கள்? ஆனால் வொர்க் பெர்மிட், SPass மற்றும் EPass ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சுருக்கமாகச் சொன்னால், E-Pass மற்றும் S-Pass இரண்டும் தனித்தனி வேலை பாஸ். இவை உயர்நிலைத் தகுதிகளைக் கொண்ட வேலை எக்ஸ்பெர்ட் மற்றும் நடுத்தர அளவிலான திறன்களைக் கொண்ட வேலை எக்ஸ்பெர்ட்களுக்கானது.
அதேப்போல, வொர்க் பாஸ்கள் என்பது தொழிலாளர் கம்பெனிகளில் பணிபுரியும் குறைந்த அளவிலான ஸ்கில்களைக் கொண்ட ஊழியர்களுக்கானது. EPass மற்றும் SPass ஆகியவை வொர்க் பெர்மிட் என்று பெயரிடப்பட்டுள்ளதால், அவை வெவ்வேறு விசாக்கள். இதற்கு பொதுவான சில அம்சங்கள் மற்றும் 3 வேலை விசாகளுக்கும் இடையே சம்பளம் மற்றும் பலன்களில் கடுமையான வித்தியாசம் இருக்கிறது.
வொர்க் பெர்மிட்:
குறைந்த அல்லது Basic skill கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் உழைப்பு மிகுந்த துறைகளில் வேலை செய்கிறார்கள். கட்டுமானம், சேவை அல்லது கப்பல் கட்டும் தளம் மற்றும் Manufacturing துறைகளில் பணி செய்து வருகின்றனர். ஆயினும்கூட, குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் இல்லாத நாடுகளின் முன்-அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து தொழிலாளர்கள் மட்டுமே இந்த பாஸுக்குத் தகுதியுடையவர்கள். அதே சமயம் வொர்க் பெர்மிட் செல்லுபடியானது இரண்டு ஆண்டுகளுக்குத் தகுதியுடையதாக இருக்கும். இது தொழிலாளியின் வயதின் அடிப்படையில் புதுப்பித்தலுக்கு உட்பட்டது.
இருப்பினும், வொர்க் பெர்மிட்டின் மிகப்பெரிய பிரச்னை ஒவ்வொரு துறையிலும் உங்கள் பணியமர்த்துபவர் பின்பற்றுவதற்குப் பொருந்தக்கூடிய வெவ்வேறு கோட்டாக்கள் உள்ளன. 1 செப்டம்பர் 2023 முதல், NTS பட்டியலில் தடைசெய்யப்பட்ட தொழில்களுக்கு NTSல் இருந்து வெளிநாட்டு ஊழியர்களை முதலாளிகள் பணியமர்த்தலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் கிராம ’ஸ்பெஷல்’ உணவுகள் சிங்கப்பூரில்… லிட்டில் இந்தியாவையே மயக்கும் மணம்… சிங்கை தமிழர்களுக்கு அம்மாவான ஆச்சி ஆப்பக்கடை
SPass:
SPass என்பது நடுத்தர அளவிலான Skillகளைக் கொண்ட எந்தவொரு நாட்டின் ஊழியர்களுக்கானது. ஆனால் வொர்க் பெர்மிட்டினை போலல்லாமல், S-பாஸ் பெறுவதற்கு சில அளவுக்கோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அவை:
- குறைந்தபட்ச சம்பளம் $3000 (பிப்ரவரி 2023 வரை)
- பட்டம், டிப்ளமோ அல்லது சிறப்பு தொழில்நுட்ப சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
- ஒரு துறையில் பொருத்தமான அனுபவம் வேண்டும்
ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களைப் போலவே, SPass வைத்திருப்பவர்களும் சேவைத் துறையில் உங்களின் மொத்தப் பணியாளர்களின் மீது 10% இடஒதுக்கீட்டையும் மற்ற எல்லாத் துறைகளிலும் 18% இடங்களையும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 15% ஆகக் குறைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும். லெவி மற்றும் மருத்துவ காப்பீடு கட்டாயமாகும்.
வொர்க் பெர்மிட் வைத்திருப்பவராக இருந்தால், விசாவினை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருந்தால், சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட கல்விச் சான்றிதழுடன், சிறந்த Skillகள் மூலம் மேம்படுத்தவும் முடியும்.
செப்டம்பர் 2023 முதல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நியாயமான வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக, புதிய SPass விண்ணப்பதாரர்களுக்கான புதிய குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் $3150 ஆக உயர்த்தப்படும். தகுதிச் சம்பளம் 2025ல் மீண்டும் படிப்படியாக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
EPass:
பெரும்பாலான E-Pass வெளிநாட்டு Experts, சிறப்பு நிர்வாகிகள், மேலாளர்கள் அல்லது இயக்குநர்கள் போன்ற பதவிகளை வகிக்கின்றனர். E-Pass பெறுவதற்கான ஒரு முக்கியமான அளவுகோல், 1 செப்டம்பர் 2022ன் படி குறைந்தபட்சம் $5000 வருமானத்துடன் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகச் சான்றிதழைப் பெற்று இருக்க வேண்டும். பழைய மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, தகுதிச் சம்பளம் வேறுபடலாம்.
இருப்பினும், 1 செப்டம்பர் 2023 முதல், EP விண்ணப்பத்தார்கள் இரண்டு-நிலை தகுதி கட்டமைப்பில் தேர்ச்சி பெற வேண்டும். தகுதிச் சம்பளத்தை பூர்த்தி செய்வதோடு கூடுதலாக, EP விண்ணப்பதாரர்கள் புள்ளிகள் அடிப்படையிலான COMPASSல் தேர்ச்சி பெற வேண்டும். COMPASS ஆனது முதலாளிகளுக்கு உயர்தர வெளிநாட்டு நிபுணர்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. அதே நேரத்தில் பணியாளர்களின் திறமையையும் மேம்படுத்துகிறது.
SPassஐ போலவே, இந்த பாஸை மீண்டும் புதுப்பிக்கும் வரை, சிங்கப்பூரில் 2 ஆண்டுகள் தங்கி இருக்கலாம். செப்டம்பர் 2023 முதல், தகுதிச் சம்பளத்தைப் பெறுவதுடன், EP விண்ணப்பதார்கள் புள்ளிகள் அடிப்படையிலான COMPASS தேர்ச்சி பெற வேண்டும்.