TamilSaaga

சிங்கப்பூர் வேலையாதரவு திட்டம் (JSS) – உள்ளூர் தொழிலாளர்களின் ஊதியத்தை ஆதரிக்க 900 மில்லின் கொடுப்பணைவுகள்

சிங்கப்பூரில் 43,900-க்கும் மேற்பட்ட முதலாளிகள் தங்களின் 5,70,000 உள்ளூர் ஊழியர்களின் ஊதியத்தை ஆதரிப்பதற்காக சிங்கப்பூரின் வேலை ஆதரவு திட்டத்தின் (JSS) கீழ் செப்டம்பர் 30 முதல் 900 மில்லியனுக்கும் அதிகமான கொடுப்பனவுகளைப் பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடுப்பனவுடன், பிப்ரவரி 2020ல் யூனிட்டி பட்ஜெட்டில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 27.6 பில்லியன் டாலருக்கும் அதிகமான JSS ஆதரவு வழங்கப்பட்டிருக்கும் என்று நிதி அமைச்சகம் (MOF) மற்றும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (Iras) இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குள் ஏப்ரல் முதல் ஜூலை 2021 வரையிலான மாதங்களுக்கு உள்ளூர் ஊழியர்களுக்கு கட்டாய CPF பங்களிப்புகளைச் செய்த முதலாளிகள் பணம் செலுத்துவதற்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் கொடுப்பனவுகள் ஏப்ரல் முதல் ஜூலை 2021 வரையிலான ஊதியத்தை உள்ளடக்கும். மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கட்டம் இரண்டு மற்றும் மூன்று காலங்களில் மேம்பட்ட JSS கொடுப்பனவுகள் அடங்கும்.

நீடித்த நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பணப்புழக்க ஆதரவை வழங்குவதற்காக வழக்கமான மூன்று மாதக் காப்பீட்டை விட நான்கு மாத ஊதியக் கவரேஜ் அதிகமாக உள்ளது என்று MOF மற்றும் Iras (Inland Revenue Authority of Singapore) கூறியுள்ளது. ஜூலை 31க்குப் பிறகு வழங்கப்படும் ஊதியத்திற்கான கொடுப்பனவு வரும் டிசம்பர் 2021ல் வழங்கப்படும். தகுதிவாய்ந்த முதலாளிகளுக்கு இந்த மாத இறுதியில் அவர்களின் பணம் செலுத்தும் தொகை குறித்து கடிதத்தின் மூலம் அறிவிக்கப்படும். மேலும் myTax என்ற போர்ட்டலில் உள்நுழைந்து அந்த கடிதத்தின் நகலை அவர்கள் பார்க்கலாம்.

செப்டம்பர் 24, 2021ல் PayNow கார்ப்பரேட் நிறுவனத்தில் பதிவுசெய்த அல்லது ஐராஸுடன் இருக்கும் ஜிரோ ஏற்பாடுகள் உள்ள முதலாளிகள் செப்டம்பர் 30 முதல் JSS கொடுப்பனவுகளைப் பெற அவர்கள் எதிர்பார்க்கலாம். மற்ற முதலாளிகள் தங்கள் காசோலைகளை அக்டோபர் 15 முதல் பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தீவு முழுவதும் ஏழு ஜிம்களைக் கொண்ட உடற்பயிற்சி நிறுவனமான “ஜிம்பாக்ஸ்”, இந்த கொடுப்பனவுகளை வரவேற்றுள்ளது.

Related posts