சிங்கப்பூர் வேலைக்காக ஏகப்பட்ட லட்சங்கள் ஏஜென்ட்டிடம் கட்டி வேலைக்காக வரும் போது கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களையும் பொறுத்து கொண்டு வேலை செய்து கொண்டு இருப்பார்கள். அப்படி ஒரு நிலையில் இருக்கும் போது பயிற்சியும் கொடுத்து நல்ல சம்பளம் கொடுக்கும் வேலை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.
வேலைக்காக சிங்கப்பூர் வரும் போது பலர் படித்துவிட்டு அந்த துறையில் வேலைக்கு வருவார்கள். சிலர் அனுபவத்தினை வைத்து கொண்டு skill அடித்து வேலைக்கு வந்திருப்பார்கள். skill அடிக்காம வரவே முடியாதுனு பலருக்கு கவலை கூட இருக்கும். இப்படி இருக்கும் எல்லா பிரச்னைகளுக்குமே இந்த பதிவு ஒரு தீர்வா இருக்குமுனு நம்புங்க.
இதையும் படிங்க: இந்தியா தமிழை மறக்கலாம்… சிங்கப்பூர் மறக்காது… உயிரோடு கலந்த உணர்வு அது… ஏப்ரல் 1 முதல் தமிழ் மாத கொண்டாட்டங்கள்!
சிங்கப்பூரில் இருக்கும் Port of Singapore Authorityல தான் இந்த வேலை இருக்கு. Lashing ஸ்பெஷலிஸ்ட்டாக உங்களை வேலைக்கு எடுப்பார்கள். துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பல்களில் இருக்கும் கண்டெயினர் அசையாமல் இருக்க செய்யும் கம்பு அடைப்பு தான் வேலையே. சில நேரங்களில் பொறுத்துவது போலவும், சில நேரங்களில் அதை ரீமுவ் செய்வதும் வேலையாக இருக்கும். இந்த வேலையை வாங்கி தர ஏஜென்ட் தரப்பில் கட்டணமாக 3 லட்சம் முதல் 3.5 லட்சம் வரை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. சம்பளமாக 2000 சிங்கப்பூர் டாலர் வரை கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்காக வரும் தமிழரா நீங்க… இங்கு கம்பெனி உங்களுக்கு தரும் இன்சூரன்ஸ்… எதுவெல்லாம் Cover ஆகும் தெரிஞ்சிக்கோங்க… நிம்மதியா இருங்க!
இரண்டு ஷிப்ட்களில் 12 மணி நேரம் வேலை இருக்கும். பெரும்பாலும் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வேலை நடக்கும். லேஷிங் வொர்க்கில் சில வருடங்கள் மட்டுமே பணி அனுபவம் இருந்தால் உங்களுக்கு சம்பள உயர்வுடன் ப்ரோமோஷனும் கிடைக்கும்.