தற்போது உள்ள காலகட்டத்தில் நீங்கள் எந்த வெளிநாட்டிற்கு பயணித்தாலும் பெருந்தொற்று குறித்த சோதனை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது என்றே கூறலாம். இந்த தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் நாம் உள்ளோம் என்றே கூறலாம். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்துவங்கிய இந்த நோய் தொற்று, பல உருவங்கள் எடுத்து தற்போது Omicorn என்ற விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் முறையாக கடைபிடித்தல் மற்றும் தடுப்பூசிகளை முறையாக எடுத்துக்கொண்டால் நிச்சயம் நம்மால் இந்த நோயினை இந்த 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஒழித்துக்கட்ட முடியும் என்கிறது WHO.
இது ஒருபுறம் இருக்க சிங்கப்பூரில் இருந்து தமிழ் உள்பட இந்தியாவின் பிற நகரங்களுக்கு பல மக்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி வருபவர்கள் நிச்சயம் தங்கள் விமான பயணத்திற்கு முன்பு கட்டாய பெருந்தொற்று பரிசோதனை எடுக்க வேண்டும். ஆனால் சிங்கப்பூர் எங்கு மலிவான பெருந்தொற்று சோதனை எடுப்பது என்பது தெரியாமல் குழம்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த இணையதளத்தின் மூலம் மக்கள் தங்களுக்கான RT PCR சோதனைக்கு புக்கிங் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கே வந்து எடுக்கப்படும் சோதனைகளும் இந்த சேவையில் நீங்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையினால் சிங்கப்பூரில் இருந்து பிற நாடுகளுக்கு பயணிப்பவர்கள் நிச்சயம் இந்த லிங்கை பயன்படுத்தி அவர்களுக்கான பெருந்தொற்று சோதனைகளை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல VTL சேவை குறித்து நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்தியின்படி ஜனவரி 20 வரை VTL புக்கிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 21லிருந்துஜனவரி 31 வரை நிறுத்தப்படவில்லை. ஆகையால் வரும் ஜனவரி 21 2022 முதல் இம்மாத இறுதி வரை அதாவது ஜனவரி 31 2022 வரை சென்னையில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான விமான டிக்கெட்டுகள் அதாவது VTL வழியாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான VTL டிக்கெட்கள் வேகமாக விற்று தீர்ந்து வருவதாகவும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திலும் அதி வேகமாக டிக்கெட்கள் திருந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த பயணிகளுக்கான டிக்கெட் விலையும் 50,000 இந்திய ரூபாய் வரை உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.