TamilSaaga

சிங்கப்பூர் – ஹாங்காங் : இருவழி விமான பயணம் குறித்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சிங்கப்பூரில் தற்போது நிலவும் கொரோனா சூழல் குறைந்த பிறகு சிங்கப்பூர்-ஹாங்காங் விமான பயணம் தொடர்பான விவாதங்களை மீண்டும் தொடங்க ஆவனம் செய்யப்படும் என்று சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மற்றும் ஹாங்காங்கின் வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டு செயலாளர் எட்வர்ட் யாவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

“இந்த காலகட்டத்தில் இரு நாடுகளும், இரு இடங்களிலும் உள்ள பொது சுகாதார நிலைமையை கண்காணிக்கும்” என்று சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் இன்று (ஜூலை 20) தெரிவித்தார். மேலும் தற்போது சிங்கப்பூரில் நிலவும் சூழலின் காரணமாக கணக்கிட்ட கால அளவில் எல்லைகளை திறப்பது கடினம் என்று என்று ஹாங்காங் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சிங்கப்பூரால் செயல்படுத்தப்பட்ட மேம்பட்ட தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் செயல்திறனையும், அந்த நேரத்தில் உலகளாவிய சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அடுத்த மாத இறுதியில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் இடையேயான பயணம் குறித்து மறுஆய்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் இடையேயான போக்குவரத்துக்கு என்பது ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்க இருநாடுகளிலும் நிலவும் கொரோனா பரவலை பொறுத்ததே அமையும் என்பது நிதர்சனம்.

Related posts