சிங்கப்பூர் குடியரசு தனது விமானப்படையின் (RSAF) ஏ 330 மல்டி ரோல் டேங்கர் டிரான்ஸ்போர்ட் (MRTT) விமானத்தைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற அமெரிக்காவுக்கு உதவ சிங்கப்பூர் முன்வந்துள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த RSAF MRTT ஒரே நேரத்தில் 266 பயணிகள் அல்லது 37,000 கிலோ சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. மேலும் நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த பணியாளர்களை வெளியேற்ற பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை அமெரிக்கா நடத்துகிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்று துணை ஜனாதிபதியிடம் (ஹாரிஸ்) குறிப்பிட்டுள்ளேன். மேலும் சிங்கப்பூர் அமெரிக்காவிற்கு (RSAFஇன் MRTT) விமானத்தை ஏர்லிஃப்டில் உதவியாகப் பயன்படுத்த விரும்புகிறது” என்று திரு. லீ கூறினார்.
சைபர் பாதுகாப்பு மற்றும் காலநிலை நெருக்கடி உள்ளிட்ட பல பகுதிகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் இரு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. திருமதி ஹாரிஸ், ஆப்கானிஸ்தான் தொடர்பான “மிகவும் தாராளமான சலுகைக்காக” திரு. லீவுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். அந்த விவாதத்தைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.