TamilSaaga

“இரண்டு கட்டங்களாக 2023 மற்றும் 2024ம் ஆண்டில் GST உயரும்” : சில அசத்தல் சலுகைகளும் அறிவிப்பு – சிங்கப்பூர் பட்ஜெட் 2022

சிங்கப்பூரில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதம் 7 முதல் 9 சதவீதம் வரை இரண்டு நிலைகளில் அதிகரிக்கும் என்று இன்றைய 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் வோங் கூறினார். இந்த அதிகரிப்பு ஒவ்வொரு முறையும் அதாவது ஜனவரி 1, 2023 மற்றும் ஜனவரி 1, 2024 அன்று ஒரு சதவீதம் என்று படிப்படியாக உயர்த்தப்படும். நமது நாட்டில் GST உயர்வின் தாக்கத்தைத் தணிக்க கடந்த 2020ம் ஆண்டில் முன்னர் அறிவிக்கப்பட்ட $6 பில்லியன் அஷ்யூரன்ஸ் பேக்கேஜ் திட்டம் தற்போது $640 மில்லியன் ஊக்கத்தைப் பெறும். அதாவது மொத்தம் $6.6 பில்லியன் என்ற அளவிற்கு உயரும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) தனது முதல் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் புதிய வேலைவாய்ப்பு பாஸ் மற்றும் S Pass விண்ணப்பதாரர்கள்” : அடிப்படை தகுதி சம்பளத்தில் 500 டாலர் உயர்வு

GST வருவாய் கூடுதல் சுகாதாரச் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இருக்காது என்று திரு வோங் கூறினார். அதனால் தான் சிங்கப்பூருக்கு GST அதிகரிப்பு மட்டுமின்றி தனிநபர் வருமான வரி, சொத்து வரி, வாகன வரி ஆகியவற்றிலும் மாற்றங்கள் தேவை என்று அவர் தனது உரையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். GSTயின் நேரத்தைப் பொறுத்தமட்டில், ஒட்டுமொத்த நிலவரத்தை அதாவது நாட்டின் தற்போதைய தொற்றுநோய் நிலை, பொருளாதாரத்தின் நிலை மற்றும் பணவீக்கத்திற்கான கண்ணோட்டம் ஆகியவற்றை கவனமாக பரிசீலித்ததாக திரு வோங் கூறினார்.

“நமது வருவாய் தேவைகளில் அழுத்தம் உள்ளது, ஆனால் விலைவாசி உயரும் அதே நேரத்தில் GST அதிகரிப்பு குறித்து சிங்கப்பூரர்கள் கொண்டிருக்கும் கவலையும் எனக்குப் புரிகிறது,” என்று மேலும் அவர் கூறினார். அதனால் தான் GST அதிகரிப்பு 2023கம் ஆண்டுக்கு தாமதமாகி, இரண்டு படிகளில் உயர்த்தப்படுகிறது என்றார் அவர். முதலில், ஜனவரி 1, 2023 அன்று 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும்; ஜனவரி 1, 2024 அன்று 8 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகவும் உயரும்.

“எவ்வாறாயினும் நல்வாழ்வை ஆதரிக்கும் அம்சங்கள் மற்றும் திட்டங்களுடன், எங்கள் தனித்துவமான சிங்கப்பூர் வழியில் GSTயை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார். சிங்கப்பூர் முதலில் 2018ம் ஆண்டு தான் 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்ட 2 சதவீத GST அதிகரிப்பை அறிவித்தது, ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அது தாமதமானது. என்பது குறிப்பிடத்தக்கது. சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணங்களில் செலுத்த வேண்டிய கூடுதல் ஜிஎஸ்டியை உள்வாங்குவதற்காக, நகர சபைகளுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக $15 மில்லியன் வழங்குவதாக இன்று வெள்ளிக்கிழமை திரு. வோங் கூறினார்.

Budget 2022: குடியிருப்பு சொத்துகளுக்கான வரி விகிதங்கள் 12 முதல் 36 சதவீதம் வரை உயருகிறது! சிங்கப்பூரர்களே நோட் பண்ணிக்கோங்க!

ஜனவரி 1, 2023 முதல் ஒரு வருடத்திற்கு அரசாங்கக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது, என்றார். ஓட்டுநர் உரிமம் போன்ற உரிமக் கட்டணங்களுக்கும், சேவைகளை வழங்குவதற்காக அரசு நிறுவனங்களால் விதிக்கப்படும் கட்டணங்களுக்கும் இது பொருந்தும். இதில் பள்ளிக் கட்டணங்களான தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் பாலிடெக்னிக் கட்டணம், பொது வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் ஆகியவை அடங்கும், என்றார் அமைச்சர். அதே நேரத்தில் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசு சாரா நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் கட்டணங்களுக்கு இது பொருந்தாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts