TamilSaaga

வேலை இடத்தில் தொடரும் தொழிலாளர் மரணங்கள்… சரமாரியாக அபராதம் விதித்து தீர்ப்பளித்த சிங்கப்பூர் அரசு!

சிங்கப்பூரில் வேலை இடங்களில் மரணம் நிகழ்ந்து வருவதை நாம் கடந்த சில மாதங்களில் அடிக்கடி செய்திகளாக பார்த்தோம். இந்நிலையில் வேலை இடத்தில் மெத்தனமாக இருந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து சிங்கப்பூர் அரசு தீர்ப்பளித்துள்ளது. இயந்திரங்கள் தொடர்பான மரணங்கள், வாகனங்களின் மூலம் ஏற்பட்ட விபத்துக்கள், ஊழியர்கள் விழுந்ததன் காரணமாக விழுந்த சம்பவம் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரிழந்ததன் காரணமாக மூன்று நிறுவனங்களுக்கு அபராதம் அளிக்கப்பட்டுள்ளது. வேலை இடத்தில் மரணம் நிகழ்ந்தது மட்டுமல்லாமல் கடுமையான விபத்துகளின் காரணமாக பல்வேறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதன் மூலம் இதுவரை காயமடைந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 311 ஆக பதிவாகியுள்ளது அவற்றில் 46 பேர் இயந்திரங்கள் மூலம் காயமடைந்துள்ளனர் எனவும், 42 பேர் மிக உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததன் காரணமாக காயமடைந்துள்ளனர் எனவும் 14 பேர் வாகனத்தின் மூலம் காயமடைந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையில் மட்டும் 14 பேர் வேலை இடத்தில் மரணம் அடைந்துள்ளனர் என பதிவாகியுள்ளது. இவற்றில் நாலு பேர் உயரமான இடத்தில் இருந்து விழுந்து இறந்தவர்கள் எனவும் ஏழு பேர் வாகனங்களின் மூலம் ஏற்பட்ட விபத்துகளின் காரணமாக இருந்தவர்கள் எனவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் கோழிப்பண்ணையில் வேலை பார்க்கும் நபரின் மீது வாகனம் ஏறியதில் அவர் உயிரிழந்தால் இ?அந்நிறுவனத்திற்கு 185000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மெட்டல் கம்பெனியில் வேலை பார்க்கும் தமிழக ஊழியர் செல்வராஜ் என்பவர் இயந்திரம் காரணமாக உயிரிழந்தார் என்பதால் அந்த நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.2019 ஆண்டு பணியிடத்தில் உயரத்தில் இருந்து விழுந்து ஊழியர் இறந்ததன் காரணமாக அவர் நிறுவனத்திற்கு 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்னதான் அபராதம் விதிக்கப்பட்டாலும் வேலை இடத்தில் மரணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

Related posts