TamilSaaga

இந்தியர்கள் முன்னோர்களாக நினைத்து படையலிடும் காகங்கள்… சிங்கப்பூர் மக்கள் அலறி ஓட காரணம் என்ன?

நம் ஊரில் காகங்கள் என்றாலே அதை முன்னோர்களாக பாவித்து அமாவாசை அன்று உணவளிப்போம். இன்னும் சொல்ல போனால் வீட்டில் மீதம் உள்ள உணவை தினமும் காலையில் மொட்டை மாடியில் கொண்டு போய் வைக்கும் குடும்பங்கள் நம்மில் ஏராளம். சிறு வயது முதல் வடையை காக்கா திருடிய கதை தான் நாம் கேட்டு வளர்ந்து இருப்போம். சிங்கப்பூரை பொறுத்தவரை அப்படி அல்ல.

காக்கா என்றாலே என்றாலே சிங்கப்பூர் மக்கள் பயந்து நடுங்குகின்றனர். அதற்கு காரணம் பொது இடத்தில் செல்வோரை தலையில் கொத்தி காகம் அவர்களை சிரமப்படுத்துவதாகும். எனவேதான் காகங்களை அகற்றுவதற்கு என்றே தனிக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரின் தேசிய பூங்கா கழகம் காகங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் தனது முழு முயற்சியை அளித்திருப்பதாக சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காகங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களில் காக்காவை பார்த்தால் அவற்றை பிடிப்பது, மரங்களில் கட்டப்பட்டுள்ள கூடுகளை அகற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்பதால் எண்ணிக்கை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருப்பதாக அமைச்சர் கூறினார். மேலும் பொதுமக்கள் பறவைகளுக்கு உணவை கொடுப்பதால் அவை மனிதர்கள் உள்ள வட்டாரங்களை தேடி வருவதாக கூறியவர் காகங்களுக்கு உணவிட வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts