TamilSaaga

“மலேசியாவின் Kelantan பகுதியில் கோர விபத்து” – சிங்கப்பூரின் முன்னாள் பத்திரிகையாளர் Marc Lourdes காலமானார்

முன்னாள் பத்திரிகையாளர் மார்க் லூர்து இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 5) மலேசியாவின் கெலாந்தன் மாநிலத்தில் நடந்த ஒரு விபத்தில் காலமானார் என்று மலேசியாவின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, அவருக்கு 40 வயது. இன்று பிற்பகல் 1.20 மணியளவில் KM40 Jalan Kota Baru-Kuala Kraiல் திரு. லூர்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் என்றும் மற்றும் எதிரே வந்த நான்கு சக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளார் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (NST) தெரிவித்துள்ளது.

“உன்ன நம்பி பின்னால உட்கார்ந்தது என் தப்பு” : சிங்கப்பூரில் பார்க்கிங்கில் “தில்லுமுல்லு” செய்த ஓட்டுநர் – இது தான் Instant Karma போல!

அவரது மரணம் குறித்த செய்தியை அவரது மைத்துனர் ரேமண்ட் ஜூட் உறுதிப்படுத்தியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. NST செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, மச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை கண்காணிப்பாளர் Ganti Jimmy, முன்னாள் பத்திரிகையாளர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டார் என்று கூறினார். எதிரே வந்த காரின் ஓட்டுநர் காயமடையவில்லை என மாவட்ட காவல்துறை தலைவர் மேலும் தெரிவித்தார்.

திரு. லூர்து தனது மனைவியையும் தாயையும் தனியே தவிக்கவிட்டுச் சென்றுள்ளார், NST-யில் சேருவதற்கு முன்பு கடந்த 2005ம் ஆண்டு The Star என்ற பிரபல பத்திரிகையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மார்க். அவர் பின்னர் yahoo மலேசியா, yahoo சிங்கப்பூர் மற்றும் அதன்பின் yahoo தென்கிழக்கு ஆசியாவின் தலைமை ஆசிரியரானார் என்று குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் CNNல் ஆசியாவின் டிஜிட்டல் இயக்குநராக சேர்ந்தார் என்று NST தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிம்மதி தரும் செய்தி.. அரசு முக்கிய அறிவிப்பு

மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான பத்திரிகையாளர்களில் மார்க் குறிப்பிடத்தக்கவர் ஆவர். “தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts