TamilSaaga

சிங்கப்பூருக்கு மீண்டும் விமானங்கள் இயக்க முடிவு.. பிரபல Fire Fly Airlines அறிவிப்பு – அடுத்த மாதம் முதல் இயக்கப்படும் ATR 72-500!

அண்டை நாடான மலேசியாவின் Fire Fly ஏர்லைன்ஸ், பெருத்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் வரும் ஜூன் 13ம் தேதி முதல் சிங்கப்பூருக்கான விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“Singapore, We Are Back” என்று இன்று திங்கள்கிழமை (மே 23) ஒரு பேஸ்புக் பதிவில் குறைந்த கட்டண கேரியர் நிறுவனமான Fire Fly தெரிவித்துள்ளது. சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திற்கும் சிங்கப்பூரில் உள்ள செலிடார் விமான நிலையத்திற்கும் இடையே விமானங்கள் இயக்கப்படும்.

72 இருக்கைகள் கொண்ட ATR 72-500 டர்போபிராப் விமானத்தைப் பயன்படுத்தி தினமும் இரண்டு விமானங்கள் இயங்கும் என்றும் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் Fire Fly ஏர்லைன்ஸ் அதன் சேவைகளை இவ்வாண்டு இறுதிக்குள் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் அது கூறியது.

குடும்பத்தினரின் ஆசை.. சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் போது TV வாங்கிச் செல்வது லாபமா? நஷ்டமா?

“சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் இந்த ஆண்டு மலேசியாவிற்கு இரண்டு மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதால், இரு நாடுகளிலும் உள்ள சமூகங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும், இணைக்கும் பங்கை ஆற்றுவதற்கும் இது சரியான நேரமாக இருக்கும் என்றும் Fire Fly கணித்துள்ளது.

MRT ரயிலில் குபுகுபுவென சூழ்ந்த புகை.. உயிர் பயத்தில் அலறியடித்து ஓடிய பயணிகள் – தக்க நேரத்தில் காப்பாற்றிய Kembangan எம்ஆர்டி ஸ்டேஷன்

Fire Fly நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் சீ இந்த அதிகாரப்பூர்வ தகவல்களை ஊடகங்களிடம் கூறினார். இந்த நிறுவனம் மலேசியா ஏவியேஷன் குழுமத்தின் துணை நிறுவனமாகும்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே உள்ள எல்லை கடந்த ஏப்ரல் 1 அன்று தங்கள் எல்லைகளை மீண்டும் திறந்தன, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தலின் தேவையின்றி நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts