சிங்கப்பூரின் லெங்கோக் ஃபார் பகுதியில் வயது முதிர்ந்தவர்களுக்காக முதன் முதலாக தொடங்கப்பட்ட ஃபேர் பிரைஸ் கடையானது அக்டோபர் 1 முதல் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதியவர்கள் மற்றும் உடலளவில் இயலாதவர்களுக்காக இவி எனப்படும் சமூக அமைப்புடன் இணைந்து முதன்முதலாக தொடங்கப்பட்ட கடை இதுவாகும்.
இதன் மூலம் இதுவரை சிங்கப்பூரில் உள்ள பல்வேறு மக்கள் பயனடைந்தார்கள் என NTUC-ன் தலைமை அதிகாரி கூறினார். 2030 ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரில் வயது முதிர்ந்த அவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என 2015 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டதால் இந்த கடையானது திறக்கப்பட்டது என அவர் கூறினார்.
இந்த கடைகளின் நுழைவாயில்களிலும், நடைையோரங்களிலும் இயலாதவர்கள் அழைக்கும் பட்சத்தில் பட்டன்களுடன் கூடிய எலக்ட்ரானிக் சிஸ்டம் அமைக்கப்பட்டிருக்கும். இயலாதவர்கள் அந்த பொத்தானை அழுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த அமைப்பு செயல்பாட்டில் இருந்தது. இந்நிலையில் சில எதிர்பாராத காரணங்களுக்காக இந்த கடை மூடப்படுவதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.