TamilSaaga

தொடர்ந்து பத்தாவது மாதமாக சரிவை காணும் சிங்கப்பூரின் ஏற்றுமதி… காரணம் என்ன?

சிங்கப்பூரின் ஏற்றுமதி நிலையை பொறுத்தவரை பத்தாவது மாதமாக தொடர்ந்து சரிவை கண்ட வண்ணம் உள்ளது. எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 20 சதவீதம் சரிவினை கண்டுள்ளது.மேலும், ஜூன் மாதத்தை காட்டிலும் இது 3.4% குறைவு என தெரியவந்துள்ளது. ஏற்கனவே சிங்கப்பூரின் ஏற்றுமதி 15% குறைய வாய்ப்புள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கருத்துக்கணிப்பில் தெரிவித்தனர். அதை மெய்யாக்கும் வண்ணம் எண்ணெய் சாரா பொருள்களின் உள்நாட்டு ஏற்றுமதியானது 15% சரிந்துள்ளது.

சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆசியாவிலும் ஏற்றுமதிகள் குறைந்து வருவதாக சிங்கப்பூரின் முன்னணி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் இதற்கான தேவைகள் குறைந்துள்ளது ஏற்றுமதி குறைவிற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. முக்கியமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதியானது 26% குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எலக்ட்ரானிக்ஸ் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 18% குறைந்துள்ளது.

இவை மட்டுமல்லாமல் பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதியும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. சிங்கப்பூரில் உள்ள முக்கியமான பத்து சந்தைகளிலும் பெரும்பாலான ஏற்றுமதிகள் ஜூலையில் சரிவை கண்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts