TamilSaaga

சிங்கப்பூரில் கூடவே பழகிய நண்பரின் மீது லாரியை ஏற்றிய நபர்… நடுரோட்டில் லாரியுடன் நண்பரை இழுத்துச் சென்ற குற்றத்திற்கு தண்டனை அளித்த நீதிமன்றம்!

கூடவே பழகிய நண்பரின் மீது லாரியை ஏற்றி அவரை காயப்படுத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கில் தற்பொழுது சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட பிரதீப் ராமுக்கு 5000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் மற்றும் 21 மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு அவர் வாகனத்தை ஓட்டக்கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் ஆனது கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கானது உச்சகட்டத்தில் இருந்த பொழுது மே 23ஆம் தேதி நடந்ததாக தெரிகின்றது. அப்பொழுது ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என்ற உத்தரவை சிங்கப்பூர் அரசு தெரிவித்திருந்தது. அதையும் மீறி பிரதீப் மற்றும் அவரின் நண்பரான பிரவீன் சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.

பின்பு கார் பார்க்கிங்குக்கு சென்று வீடு திரும்ப முடிவெடுத்த பொழுது மது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் வாக்குவாதம் முற்றியதில் பிரவீன் கீழே விழுந்தார். மதுபோதையில் செய்வதறியாது பிரதீப் லாரியை எடுக்க முயன்ற போது, பிரவீன் ஆடைகளில் சிக்கி லாரியுடன் அவர் சேர்ந்து இழுத்துச் செல்லப்பட்டார்.

உடனடியாக இச்ச சம்பவத்தில் உடனடியாக பிரவினை காப்பாற்றிய பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், லாரியை ஏற்றிய பிரதிப்பை உடனடியாக போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறியது, மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது, நண்பரின் மீது வாகனத்தை ஏற்றியது ஆகிய குற்றங்களை பிரதீப் ஒப்புக்கொண்டார். எனவே அவருக்கு உரிய தண்டனைகளை வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Related posts