சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நேற்று நடந்த முடிந்த நிலையில் முன்னால் மூத்த அமைச்சரான திரு தர்மன் சண்முகரத்தினம் தேர்தலில் வெற்றி பெற்று சிங்கப்பூரின் அடுத்த அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்த தேர்தலில் திரு தர்மன் அவர்களுக்கு சுமார் 70.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தர்மன் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட திரு இங் கொக் சொங்கிருக்கு 15.72 சதவீதம் வாக்குகளும், திரு டான்கின் அவர்களுக்கு 13.88% வாக்குகளும் கிடைத்துள்ளன. தேர்தலுக்கான முடிவுகள் நேற்று இரவு 12 30 மணி வெளியான நிலையில் திரு தர்மன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து தனக்கு ஆதரவு அளித்த சிங்கப்பூர் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட்டு வெற்றியை மகத்தான வெற்றியாக மாற்றிய சக வேட்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தர்மனுக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவினாலும் தர்மன் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். திரு தர்மன் அவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி அதிபராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.