TamilSaaga

வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்த ஆதித்யா எல் ஒன்… உலக நாடுகளுக்கு சவால் விடும் அடுத்த மிஷன்!

சந்திரயான் 3 விண்கலத்தினை கடந்த மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் காரணமாக, விண்வெளி வரலாற்றில் தனி இடத்தை பிடித்தது இந்தியா. உலக நாடுகளின் கவனம் முழுவதும் இந்தியாவின் பக்கம் திரும்பி, தனது பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் இருந்தன. உலக அளவில் வல்லரசு நாடாக இல்லாவிட்டாலும், விண்வெளியில் நாங்கள் தான் வல்லரசு என்பதை நிரூபித்து காட்டியது இந்தியா.

இந்நிலையில் அச் சாதனையில் மற்றும் ஒரு மணிமகுடமாக இன்று “ஆதித்யா எல் ஒன்” என்ற சேட்டிலைட் இணை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்கலத்தை அனுப்பிய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. சூரியனிலிருந்து வெளிவரும் அதிக வெப்ப ஆற்றலின் காரணமாக இதுவரை எந்த நாடும் சூரியனை ஆராய செயற்கை கொலை அனுப்பாத நிலையில், படைத்துள்ளது இந்தியா.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள psv c57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரியனைப் பற்றிய விடை தெரியாத பல புதிர்களுக்கு இந்த செயற்கைக்கோள் பதில் சொல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக சூரியனின் காந்த புலன்கள் பூமியின் மீது ஏற்படும் பாதிப்பை கொடுத்து இது ஆராய உள்ளதால், தொலைத் தொடர்பு துறை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Related posts