இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் Ng Eng Hen இன்று (பிப்.19) சந்தித்துப் பேசினார். இருவரும் இருநாட்டுப் பிரச்சனை தொடர்பாக விவாதித்தனர்.
Munich Security Conference-ல் (எம்.எஸ்.சி) பங்கேற்பதற்காக ஜெர்மனிக்கு சென்ற சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் Ng Eng Hen அங்கு இந்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.
அப்போது இருதரப்பு மற்றும் ASEAN தொடர்பான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது.
இந்த மீட்டிங் நடைபெற்றது இருதரப்பிலும் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அண்மையில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் லீ, “நேருவின் இந்தியா”வில் ஊடக அறிக்கைகளின்படி தற்போது, லோக் சபாவில்.. அதாவது இந்திய மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றாலும், இன்னும் இதே நிலைதான் நீடிக்கிறது” என்று அவர் பேசியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதுமட்டுமின்றி, சிங்கப்பூர் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனங்களை பதிவு செய்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த சூழலில் தான் இருவரின் சந்திப்பு நிகழந்துள்ளது.