சிங்கப்பூரில் அதிக ஊதியம் தரும் துறைகளில் டிரைவர் வேலைக்கு எப்போதும் தேவை உள்ளது. குறிப்பாக, கனரக வாகனங்களை (heavy vehicles) ஓட்டும் டிரைவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளும், நல்ல சம்பளமும் கிடைக்கும். இதற்காக வழங்கப்படும் உரிமம் தான் Class 4 உரிமம். இந்த உரிமத்தைப் பெறுவதற்கான தகுதிகள், செயல்முறை மற்றும் செலவுகள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்.
Class 4 உரிமம் என்றால் என்ன?
Class 4 உரிமம் என்பது கனரக வாகனங்களை (heavy vehicles) ஓட்டுவதற்கான உரிமம் ஆகும். இதை வைத்திருப்பவர்கள் லாரிகள், சரக்கு வண்டிகள் போன்ற பெரிய வாகனங்களை ஓட்டலாம். இந்த உரிமத்திற்கு சிங்கப்பூரில் நல்ல மதிப்பு உண்டு.
Class 4 உரிமம் பெறுவதற்கான செலவு
Class 4 உரிமம் பெறுவதற்கான மொத்தச் செலவு தோராயமாக $1300 முதல் $1400 சிங்கப்பூர் டாலர்கள் வரை ஆகலாம். இந்த செலவில் பயிற்சி வகுப்புகள், தேர்வுக் கட்டணங்கள், தற்காலிக ஓட்டுநர் உரிமம் (PDL) மற்றும் பிற நிர்வாகச் செலவுகள் அடங்கும். நீங்கள் தேர்வில் தோல்வியடைந்தால், மீண்டும் பயிற்சி எடுத்து தேர்வு எழுத $200 முதல் $500 சிங்கப்பூர் டாலர்கள் வரை கூடுதல் செலவு ஆகலாம்.
Class 4 உரிமம் பெறுவதற்கான தகுதிகள் (வெளிநாட்டவர்களுக்கு)
சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் Class 4 உரிமம் பெற, பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
குடியிருப்பு நிலை (Residency Status): நீங்கள் சிங்கப்பூரில் நீண்ட கால குடியிருப்புத் தகுதி வைத்திருக்க வேண்டும். அதாவது, உங்கள் வேலை அனுமதி (Employment Pass), எஸ் பாஸ் (S Pass), அல்லது நிரந்தர குடியிருப்பு (Permanent Residency) ஆகியவை செல்லுபடியாக இருக்க வேண்டும்.
வயது: உங்களுக்குக் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
- Class 3 உரிமம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகச் செல்லுபடியாகும் Class 3 ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- மருத்துவத் தகுதி (Medical Fitness): நீங்கள் கனரக வாகனங்களை ஓட்ட உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தகுதியானவர் என்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் நிரூபிக்க வேண்டும்.
- போக்குவரத்து விதிமீறல் பதிவு (Driving Record): உங்கள் ஓட்டுநர் பதிவில் கடுமையான போக்குவரத்து விதிமீறல்கள் எதுவும் இல்லாமல், அது தூய்மையாக இருக்க வேண்டும்.
வேலை அனுமதி:
- S-Pass, E-Pass, Work Permit என எந்த வகையான விசா வைத்திருப்பவர்களும் இந்த உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- ஆனால், உங்கள் வேலை அனுமதி அட்டையில் ‘Driver’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- ‘Driver-cum-Worker’ என்று உங்கள் பணித் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தால், நீங்கள் எந்த பாஸ் வைத்திருந்தாலும் Class 4 உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
1. Class 4 உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முன், உங்கள் நிறுவனத்திடம் இருந்து ஒரு கடிதம் பெற வேண்டும். அந்தக் கடிதத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களுடன், உங்கள் பணி ‘டிரைவர்’ (Driver) என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் தயார் செய்ய வேண்டிய ஆவணங்கள்:
- நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடிதம் (பணி “டிரைவர்” என குறிப்பிட்டிருக்க வேண்டும்).
- உங்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட்.
- உங்கள் ஒரிஜினல் வேலை அனுமதி அட்டை (Work Permit).
- MyWork SG App-ல் இருந்து உங்கள் வேலை அனுமதி தகவல்களின் பிரிண்ட் அவுட்.
- உங்கள் Class 3 ஓட்டுநர் உரிமம்.
- Woodlands Driving Test Centre-க்குச் செல்லுதல்
மேலே குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு, Woodlands Driving Test Centre-க்கு நேரடியாகச் செல்ல வேண்டும். இதுவே அரசு அங்கீகாரம் பெற்ற ஒரே மையம். தனியார் பயிற்சி மையங்களும் உள்ளன, உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மையங்களை நீங்கள் விசாரித்து அறியலாம்.
Class 4 உரிமம் பெறுவதற்கு, Woodlands Centre-ல் முன்கூட்டியே அப்பாயின்ட்மென்ட் எடுக்கத் தேவையில்லை. நீங்கள் நேரடியாகச் செல்லலாம்.
ஆவண சரிபார்ப்பு மற்றும் கட்டணம் செலுத்துதல்
மையத்திற்குச் சென்றதும், உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். உங்கள் தகுதிகள் சரியாக இருந்தால், அவர்கள் உங்களை அடுத்த நிலைக்கு (Level 3) அனுப்புவார்கள். அங்கு உங்களுக்கு டோக்கன் வழங்கப்படும், பிறகு நீங்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம்.
நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் கண்டிப்பாக கனரக வாகனம் (heavy vehicle) இருக்க வேண்டும்.
உங்கள் வேலை அனுமதியின் கால அவகாசம் 90 நாட்களுக்கு மேல் இருக்க வேண்டும்.
கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பிறகு, பயிற்சி வகுப்புகளுக்குப் பதிவு செய்யலாம். Class 4 உரிமம் பெறுவதற்கு நீங்கள் 8 வகுப்புகளில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும். எந்தவொரு வகுப்பையும் தவறவிடாமல் இருப்பது முக்கியம். அனைத்து வகுப்புகளிலும் கலந்துகொண்டால் மட்டுமே நீங்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவீர்கள்.
பயிற்சி வகுப்புகள் முடிந்ததும், நீங்கள் கோட்பாடுத் தேர்வு (Theory test) மற்றும் நடைமுறை ஓட்டுநர் தேர்வு (Practical driving test) இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு வினாக்கள் பெரும்பாலும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் (Multiple choice questions) வகையில் இருக்கும்.
தேர்வில் தேர்ச்சி பெற்றால், நீங்கள் Class 4 உரிமத்தைப் பெற்றுவிடுவீர்கள்.
தேர்வில் தோல்வியடைந்தால், மீண்டும் 2 வகுப்புகளில் கலந்துகொண்டு, கூடுதல் கட்டணம் செலுத்தி மீண்டும் தேர்வெழுதலாம்.
வெளிநாட்டு Class 4 உரிமத்தை மாற்றுதல்:
உங்களிடம் செல்லுபடியாகும் வெளிநாட்டு Class 4 உரிமம் இருந்தால், அதை நேரடியாகச் சிங்கப்பூர் Class 4 உரிமமாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கான தேவைகள், உங்கள் உரிமம் எந்த நாட்டிலிருந்து வந்தது என்பதைப் பொறுத்து மாறுபடும்.
முக்கிய குறிப்பு: உரிமத்தை மாற்றுவதற்கு, உங்கள் நிறுவனம் அனுமதி அளிப்பது கட்டாயம்.