SINGAPORE: சிங்கப்பூர் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தங்கள் நாட்டின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் 1965 இல் குடியரசு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேசிய தினம் கொண்டாடப்படவில்லை.
1960 மற்றும் 1963 க்கு இடையில், சிங்கப்பூரின் தேசிய தினம் ஜூன் 3 அன்று கொண்டாடப்பட்டது, 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது சுயராஜ்யத்தை அடைந்த நாள். அதன் நினைவாக ஜீன் 3ல் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
ஆறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஜூன் 3 சிங்கப்பூர் தனது சொந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு அதன் வரலாற்றில் முதன்முறையாக ஒரு உள் சுயாட்சி அரசாக மாறிய நாள்.
சிங்கப்பூரின் தேசிய ஆவணக்காப்பகம் (NAS) இந்த முக்கியமான நாளை பதிவு செய்துள்ளது. “ஜூன் 3, 1959 அன்று சிங்கப்பூரில் 1.6 மில்லியன் மக்கள் ஒரு புதிய தொடக்கத்திற்கு விழித்தெழுந்தார்கள் – பிரிட்டிஷ் மகுடத்தின் கீழ் ஒரு முழு உள் சுயராஜ்ய மாநில மக்களாக சிங்கப்பூர் மாறியுள்ளது” என்று தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
ஆல்பர்ட் லா எனும் வரலாற்று ஆசிரியர் இந்த தேதி சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று சி.என்.ஏ வில் குறிப்பிட்டு உள்ளார். “சுயராஜ்யத்தை அடைவது, காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான தனது இலக்கை அடைய சிங்கப்பூருக்கு இன்னும் கூடுதலான உந்துதல் தேவை. அதற்கு இது ஒரு முக்கியமான துவக்கமாக அமைந்ததுள்ளது” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.