TamilSaaga

சிங்கப்பூர் கடற்கரை சாலை சந்திப்பு.. கண்மூடித்தனமாக சட்டென்று திரும்பிய கார்.. முடித்தூக்கிய SMRT பேருந்து, “ஏன் இவ்வளவு அவசரம்” – வெளியான வீடியோ

சிங்கப்பூர், சாலை விதிகளை பொறுத்தவரை அவற்றை மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்கும் நாடுகளில் ஒன்று என்று தான் கூறவேண்டும். இந்த வகையில் Statista என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரப்படி சிங்கப்பூரில் கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 107 பேர் சாலை விபத்தில் மரணித்துள்ளனர்.

மேலும் இந்த சாலை விபத்துகளில் பெரிய அளவில் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் என்பது வேதனை தரும் செய்தியாக உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் Ophir மற்றும் Beach சாலை சந்திப்பில், SMRT பேருந்திற்கு வழி கொடுக்காமல் மின்னல் வேகத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளது ஒரு கார்.

சிங்கப்பூர் மச்சினனுக்கு ஆசைப்பட்டு எதுவும் அறியாத தங்கையின் வாழ்க்கையையே வீணடித்த “சகோதரன்” – தப்புக் கணக்கால் ஒரு குடும்பமே சிரித்து 4 வருஷமாச்சு!

இது குறித்து Sg Road Vigilante என்ற முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோவில், Ophir மற்றும் Beach சாலை சந்திப்பில் ஒரு சிவப்பு நிற கார் எதிரே SMRT பேருந்து வருவது அறிந்தும் வேகமாக வலப்பக்கமாக சாலையை கடக்கின்றனது.

சிங்கப்பூர் கடற்கரை சாலை சந்திப்பு விபத்து – Video Courtesy Sg Road Vigilante Singapore

ஆனால் சட்டென்று வேகத்தை குறைக்க முடியாமல் தவித்த SMRT பேருந்து ஓட்டுநர் இறுதியில் குறுக்கே வந்த அந்த காரை முடித்தூக்கிய பிறகு நின்றது. காரின் பின்புறம் மேலெழும்பி கீழே விழுவதை வீடியோவில் காணமுடிகிறது.

சிங்கப்பூரில் அடுத்தடுத்து தூக்குத்தண்டை விதிக்கப்படும் தமிழர்கள்.. என்ன நடக்கிறது? ஏன் சிங்கப்பூர் அரசு இவ்வளவு கடுமை காட்டுகிறது? ஒரு Complete Report

SMRT ஓட்டுநர் சட்டென்று பிரேக் போட்டதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது என்று தான் கூறவேண்டும். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts