TamilSaaga

இந்தியாவிற்கான பயணிகளின் அளவை அதிகரிக்கும் Singapore Airlines.. களமிறங்க காத்திருக்கும் Airbus A380 – பல Exclusive தகவல்கள்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது இந்தியாவிற்கான “பயணிகளின் அளவை” (Passenger Capacity) அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிக அளவிலான பயணிகள் இந்தியா மற்றும் சிங்கப்பூர் என்று இருமார்கமாக இனி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் அரசு பல தளர்வுகளை அறிவித்ததை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு விரைவில் Airbus A380 ரக விமானங்களை இயக்கும் என்றும் அறிவித்தது. A380 ரக விமானம் என்பது 4 வகுப்புகள் கொண்ட விமானம்.

சுமார் 450க்கும் அதிகமான பயணிகள் இந்த ரக விமானங்களில் பயணிக்க முடியும், சரி பயணிகளின் அளவு உயர்வு என்றால் என்ன? இதனால் என்ன பயன்? என்பதை பின்வருமாறு காணலாம்.

விமான டிக்கெட்டிங் துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த திருச்சி நந்தனா ஏர் டிராவல்ஸ் உரிமையாளரிடம் நமது தமிழ் சாகா செய்திக்குழு தொடர்புகொண்டு கேட்டபோது அவர் அளித்த பதில் பின்வருமாறு..

ஊழியரை நம்பி Blank Cheque கொடுத்த முதலாளி.. லட்சக்கணக்கில் சுருட்டிய சிங்கப்பூர் பெண் – மே 19 முதல் துவங்கும் சிறைவாசம்!

பயணிகளின் அளவு அதாவது Passenger Capacity என்றால் என்ன?

சிங்கப்பூர் இந்தியா இருமார்க்கமாக பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் பெரிய ரக விமானங்கள் இயக்கப்பட்டன, ஆகவே இரு நாட்டுக்கும் இடையே பயணிக்கும் பயணிகளின் அளவும் அதிக அளவில் இருந்தது.

ஆனால் தொற்று காலத்தில் விமான நிறுவனங்கள் சந்தித்த பெரிய இக்கட்டான சூழலால் விமான சேவை நிறுவனங்கள் விமானங்களின் அளவை குறைந்தது ஆகவே பயணிகளின் அளவும் குறைந்தது. எல்லைக்கட்டுப்பாடுகள் காரணமாக பெரிய ரக விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் தற்போது சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தங்கள் எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில் இருநாட்டு பயணங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. ஆகவே மீண்டும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற வெகு சில விமான நிறுவனங்கள் மீண்டும் கன ரக விமானங்களை இயக்கவுள்ளது.

இதனால் இனி இருநாட்டு மார்க்கமாக பயணிக்கவிருக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

ANI செய்தி நிறுவனம் அளித்த தகவல்கள் பின்வருமாறு..

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் இருந்து தான் அதிக அளவிலான பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். சரியாக சொல்லப்போனால் 54,530 பேர் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ளார்.

சிங்கப்பூரில் அமலாகும் தளர்வுகள்.. குறைக்கப்படும் SDA அதிகாரிகள்.. இனி அவர்களின் நிலை என்ன? கைகொடுத்த சிங்கை அரசு!

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள Pre-Departure Test ரத்து, Non Malaysian Workersகளுக்கு வழங்கப்படும் Entry Approval நீக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தியர்களை சிங்கப்பூருக்குள் அதிக அளவில் வரவேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே பயணிகளின் அளவு என்பது தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts