TamilSaaga

மிகக்கவர்ச்சியான ஆடையில் வந்த சிங்கப்பூர் நடிகை : “பாட்டி” என்று அழைத்த நெட்டிசன்கள் – “Mass” பதிலடி கொடுத்த நடிகை

சிங்கப்பூரின் பிரபல நடிகை சிந்தியா கோ தான் அணிந்த உடையை பற்றி தரக்குறைவாக பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

47 வயதான சிங்கப்பூர் நாட்டின் நடிகை சிந்தியா கோ, டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று, ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் அவார்ட்ஸ் 2021, என்ற விருது வழங்கும் விழாவிற்கு மைக்கேல் கோர்ஸ் வடிவமைத்துள்ள கருநீல மேலாடையை அணிந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : அரிய வகை “தங்க இரத்தம்”

இந்த உடையை வடிவமைத்த மைக்கேல் கோர்ஸ், உடையின் முன்புறம் சற்று தாழ்வாக தோன்றும் வகையிலும், கால் பகுதிகள் சற்று வெளிப்படும் வகையில் வடிவமைத்துள்ளார்.

நாற்பத்தி ஏழு வயதான சிந்தியா கோ, இத்தகைய உடையை அணிந்து வந்ததால் சிலர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். வயதிற்கு ஏற்றார் போல் உடை அணிய வில்லை என்றும், “பாட்டிக்கு இத்தகைய உடையா” என்றும், வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி, சிந்தியா கோ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கதையையும் தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் அணிந்த உடையை பற்றி கேலி பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில்,” உங்கள் பாட்டிக்கு இத்தகைய உடையை அணிய தேவையான உடல் வாகு இருந்தால், கண்டிப்பாக அவர்களை இந்த உடையை அணிய சொல்லவும்” என்று கூறியுள்ளார். மேலும் நாற்பத்தி ஏழு வயதில் உடல் எடையை குறைத்து, சரியாக பராமரிப்பதற்கு, நிறைய சுயஒழுக்கமும் முயற்சியும் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் பெண்கள் தங்கள் உடல் வாகுக்கு ஏற்ற, விருப்பப்படுகிற உடைகளை அணிய தயங்கக் கூடாது, என்றும், வயதாவதற்கு முன்பே தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பெண்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts