சிங்கப்பூர் அரசு ToTo Draw மற்றும் 4 Digit என்ற இரு லாட்டரிகளை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றது என்பதை நாம் அறிவோம். இதில் ToTo Draw என்பது வாரம் இருமுறை நடக்கும் ஒரு குலுக்கல் லாட்டரி. அதில் சுமார் S$10,00,000 குரூப் 1 பரிசாக வழங்கப்படும்.
அதே போல 4D அதாவது 4 டிஜிட் என்ற குலுக்கல் லாட்டரியும் நடத்தப்பட்டு வருகின்றது, இதில் முதல் பரிசாக 2000 வெள்ளி வழங்கப்படுகிறது. சரி இந்த 4D குறித்து சற்று விரிவாக இந்த பதிவில் காணலாம்.
0000 – 9999 இவ்வளவு தான் 4D draw
ஆம் 0 முதல் 99 வரை உள்ள 10,000 எண்களில் ஏதேனும் 4 எண்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், எடுத்துக்காட்டாக 0,1,5,9 இப்படி 10,000 காம்பினேஷனில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். 1 வெள்ளி செலவில் இந்த டிக்கெட்டை நீங்கள் வாங்கலாம்.
உண்மைதான் நீங்கள் 10,000 காம்பினேஷனையும் வாங்கினால் எல்லா 23 பரிசும் உங்களுக்கு தான், ஆனால் அதற்கு 10,000 வெள்ளி செலவாகும். ஆனால் அதன் மூலம் உங்களுக்கு கிடைப்பது வெறும் 6590 வெள்ளி மட்டுமே.
பரிசு தொகை எப்படி வழங்கப்படும்?
வாரம் மூன்று முறை நடக்கும் இந்த ட்ராவில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, ஸ்டார்டர் பரிசு மற்றும் Consolation பரிசு என்று 4 வகைகளில் 23 பேருக்கு பரிசு வழங்கப்படும். அதாவது முதல் பரிசுக்கு ஏற்ற 4 இலக்க எண்ணை வாங்கியவருக்கு 2000 வெள்ளி வழங்கப்படும்.
இரண்டாம் பரிசுக்கான 4 இலக்க எண்ணை வாங்கியவருக்கு 1000 வெள்ளி பரிசு அளிக்கப்படும், மேலும் மூன்று இடத்தில் உள்ள ஸ்டார்டர் பரிசை வெல்ல 4 இலக்கம் கொண்ட 10 எண்கள் குலுக்கலில் வைக்கப்படும். ஆகவே அந்த 4 இலக்கம் கொண்ட 10 வெவ்வேறு எண்களை வைத்திருக்கும் 10 பேருக்கு தலா 250 வெள்ளி பரிசளிக்கப்படும்.
இறுதியாக Consolation பரிசை வெல்லவும் 4 இலக்கம் கொண்ட 10 எண்கள் குலுக்கலில் வைக்கப்படும். ஆகவே அந்த 4 இலக்கம் கொண்ட 10 வெவ்வேறு எண்களை வைத்திருக்கும் 10 பேருக்கு தலா 60 வெள்ளி பரிசளிக்கப்படும்.
ஆகவே இந்த 4D குலுக்கலில் மொத்தம் 23 பேருக்கு சராசரியாக 6590 வெள்ளி வழங்கப்படும்.
சரி இதற்கென்று ரகசிய யுக்தி உள்ளதா என்று பார்த்தால், இல்லை என்பது தான் பதில். அதிர்ஷ்டம் யார் பக்கம் உள்ளதோ அவர்களை பரிசு வந்து சேரும்.