சிங்கப்பூரில் உள்ள அப்பர் தாம்சன் சாலையில் செல்லும் மேரி மவுண்ட் மேம்பால சாலை சுரங்கப்பாதை கட்டுமான பணியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் எட்டாம் தேதி முதல் மூடப்படும் என போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கட்டுமான பணியானது 2029 ஆம் ஆண்டு தான் கட்டி முடிக்கப்படும் என்பதால் அதுவரை மேம்பாலச்சாலை மூடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் வேறு ஒரு புதிய சாலையில் திருப்பி விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களான பிசியான நேரங்களில் குறிப்பிடத்திற்க்கு செல்ல கூடுதலாக ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை ஆகலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேரி மவுண்ட் சாலை வழியாக செராங்கூன் செல்லும் வாகனங்கள் ராபிள்ஸ் பள்ளி அருகே இடது புறமாக திரும்பி பெடரல் ரோடு வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 8ம் தேதி முதல் அந்தப் பாதை வழியாக செல்லும் பொழுது போக்குவரத்து ஆணையம் வைத்திருக்கும் அறிவிப்பு பலகைகளை சரிபார்த்து அதன்படி செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயணிகளுக்கு சிரமம் ஏற்படும் என்றாலும் இச்சாலையானது கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணும் பொழுது பொது மக்களுக்கு பெருமளவு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.