சிங்கப்பூரில் பல சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரின் பாரம்பரியத்தில் தமிழர்களின் பங்கு என்பது மிகவும் அதிகம். அந்த வகையில் சிங்கப்பூரில் தமிழர்களுக்கு அழைக்கப்படும் முக்கியத்துவமும் அதிக அளவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. மேலும் இந்த பெருந்தொற்று காலத்தில் இந்திய சமூகத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகின்றது சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கம் எனப்படும் SINDA.
இந்நிலையில் நேற்று இந்த சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகிய அன்பரசு ராஜேந்திரன் மற்றும் SINDAவின் தலைவருமான அமைச்சர் இந்திராணி ராஜா “Back To School” என்ற திட்டத்தின் கீழ் 4200 மாணவர்களுக்கு பற்றுசீட்டுகளை அளித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் சுமார் 3500 மாணவர்களுக்கு உதவி செய்த நிலையில் இந்த ஆண்டு 4200 மாணவர்களுக்கு உதவிகளை செய்துள்ளது இந்த அமைப்பு. கடந்த ஆண்டினை காட்டிலும் 700 மாணவர்கள் கூடுதலாக இவ்வாண்டு பயன்பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்வின்போது பேசிய அமைச்சர் இந்திராணி,உதவி தேவைப்படும் இத்தனை மாணவர்களை கண்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் இவர்களை கண்டறிய சிறுது காலம் தேவைப்பட்டது என்பதையும் நினைத்து வருந்துகிறோம் என்று அவர் கூறினார். இருப்பினும் எங்களை பொறுத்தவரை இது நல்ல தொடக்கம் தான் என்றும் அவர் கூறினார்.
மேலும் SINDAவின் இந்த முயற்சிகளை பாராட்டிய பலர் தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும் இந்த உதவி சிறந்த முறையில் உள்ளது என்றும் கூறினார். மேலும் SINDAவின் செயல்பாடுகள் குறித்து நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் அவர்களும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.