TamilSaaga

“கவனம் தேவை சிங்கப்பூரர்களே” : நாட்டில் மேலும் 101 புதிய Omicron வழக்குகள் உறுதி – MOH அறிவிப்பு

சிங்கப்பூரில் நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 27) மதியம் வரை 280 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 134 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள் ஆவர். சுகாதார அமைச்சகம் (MOH) இணையதளத்தின் சமீபத்திய தொற்று புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரில் மேலும் மூன்று இறப்புகளும் பதிவாகியுள்ளன. பெருந்தொற்று சிக்கல்களால் சிங்கப்பூரில் இறப்பு எண்ணிக்கை 825 ஆகஉயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : SCDF படை வீரருக்கு காயம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவான 209 நோய்த்தொற்றுகளிலிருந்து நேற்று திங்களன்று வழக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திங்களன்று பதிவான புதிய வழக்குகளில், 146 உள்நாட்டில் ஏற்பட்ட தொற்றுகள் இதில் சமூகத்தில் 141 மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடங்களில் ஐந்து பேர் உள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக MOHன் இணையதள தகவல்படி, நேற்று திங்களன்று 101 புதிய Omicron வகை நோய்த்தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டதைக் காட்டியுள்ளது. இதில் 79 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் 22 உள்ளூர் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.தினசரி புதிய COVID-19 வழக்குகள் மற்றும் புதிய உறுதிப்படுத்தப்பட்ட Omicron வழக்குகள் MOHன் இணையதளத்தில் இரண்டு தனித்தனி தரவுகளாக வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று திங்களன்று வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் 0.62 ஆக இருந்தது, இது கடந்த ஞாயிற்றுக்கிழமை 0.58 ஆக இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. நவம்பர் 13 முதல் வளர்ச்சி விகிதம் 1க்குக் கீழேயே உள்ளது. 1க்குக் கீழே உள்ள புள்ளிவிவரம், புதிய வாராந்திர கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் குறிக்கிறது. நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் இதுவரை 2,78,044 COVID-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts