NETS FlashPay Card
SG60 – அதாவது சிங்கப்பூரின் 60வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இன்று ஜூலை 14ம் தேதி முதல் சிங்கப்பூர் முழுவதும் NETS FlashPay Card விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது 10 சிங்கப்பூர் வெள்ளிக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 5 வெள்ளி இருப்புடன் இந்த கார்டு உங்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சரி அது என்ன FlashPay கார்டு?
சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவருக்கும் சரி, இல்லை சுற்றுவிற்காக இங்கு வருபவர்களும் சரி, சிங்கையின் அழகை ரசிக்க பெரும் ஆசையுடன் உள்ளனர் என்றால் அது மிகையல்ல. அப்படி சிங்கப்பூரின் அழகை கண்டுமகிழ பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருவது தான் இந்த NETS FlashPay Cardகள். இந்த முறை நமது சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு SG60 NETS FlashPay Cardகள் இன்று (ஜூலை 14) முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த கார்டு தரும் பயன் என்ன?
உங்கள் சிங்கப்பூர் பயணத்தை மிகவும் முழுமையானதாகவும் சிக்கனமாகவும் மாற்ற, நீங்கள் நிச்சயமாக ஒரு மிகவும் பயனுள்ள “ரகசியத்தை” தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் இந்த NETS FlashPay அட்டை.
எளிமையாகச் சொன்னால், NETS FlashPay என்பது உங்கள் ATM அட்டையைப் போலவே செயல்படும் ஒரு ஸ்மார்ட் கார்டு. ஆனால் இது அதை விட அதிகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. MRT, பேருந்து மற்றும் டாக்ஸி டிக்கெட்டுகள், இரவு சந்தைகளில் உணவு, பிரபலமான சுற்றுலா தலங்களுக்கான டிக்கெட்டுகள் மற்றும் காலையில் ஒரு கப் காபி துவங்கி இரவு முடியும் சுற்றுலா வரை சிங்கப்பூரில் உள்ள எதற்கும் பணம் செலுத்த NETS FlashPay பயன்படுத்தலாம்.
ரயில், பஸ், மெட்ரோ உள்ளிட்ட டிக்கெட்கள் துவங்கி உணவு கடை வரை செல்லுபடியாகும் இந்த கார்டை பயன்படுத்தும்போது உங்களுக்கு நல்ல சலுகைகளும் கிடைக்கும். இதில் பணத்தை லோட் செய்து உங்களால் பயன்படுத்த முடியும்.
Employment Passல் சிங்கை வரும் ஊழியர்கள் – COMPASS பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த கார்டு எங்கே கிடைக்கும்?
இன்று ஜூலை 14 2025 முதல் சாங்கி விமான நிலையம், MRT ஸ்டேஷன், 7 Eleven கடைகள் என்று சிங்கப்பூரில் உள்ள பல இடங்களில் சுலபமாக 10 சிங்கப்பூர் வெள்ளி கொடுத்து இதை கார்டை நீங்கள் வாங்கலாம்.