லண்டனுக்குச் செல்லும் பயணிகளுக்கு அதிக விமானத் தேர்வுகள் தற்போது உள்ளது. பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்கூட் சிங்கப்பூரில் இருந்து பிரிட்டிஷ் தலைநகருக்கு டிசம்பர் 16 அன்று சேவைகளைத் தொடங்கும் என்று தற்போது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) வெளியிட்ட அறிக்கையில் இதனை கூறியது. பாங்காக் வழியாக லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கான விமானங்கள் ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று விமானங்கள் என்று இரண்டு வாரங்களுக்கு செயல்படுத்தப்படும்.
பாங்காக்கில் Transit நேரம் உட்பட, இந்த பயணம் மேற்கொள்ள சுமார் 16½ மணிநேரம் ஆகும், மேலும் இந்த பயணத்திற்கான ஒரு வழி டிக்கெட்டுகளின் விலை 434 வெள்ளியில் இருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கப்பூருக்கும் லண்டனுக்கும் இடையில் VTL பயணத்தை இலக்காகக் கொண்ட பயணிகள் லண்டனுக்கு செல்ல ஸ்கூட் விமானங்களில் மட்டுமே அதை அடைய முடியும். ஆனால் அங்கிருந்து திரும்ப அதற்கு பதிலாக, அவர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் (BA) அல்லது SIA இலிருந்து ஒரு நியமிக்கப்பட்ட VTL விமானத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.
சிங்கப்பூருக்கு வாரந்தோறும் நான்கு விமானங்களை BA இயக்குகிறது, SIA தினசரி விமானங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 300-க்கும் மேற்பட்ட பயணிகள் அமரக்கூடிய அகலமான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களைப் பயன்படுத்துவதாகவும் ஸ்கூட் நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
இந்த லண்டன் விமானங்கள் பருவகால திட்டமிடப்பட்ட சேவைகள் என்று அது மேலும் கூறியது. ஸ்கூட்டின் தலைமை நிர்வாகி திரு காம்ப்பெல் வில்சன் கூறுகையில், பிரிட்டனுக்கும் தாய்லாந்திற்கும் இடையே தனிமைப்படுத்தப்படாத பயணத்திற்கான தேவை அதிகமாக உள்ள நிலையில் அதை Scoot பயன்படுத்திக்கொள்ளும் என்றார்.