TamilSaaga

“சிங்கப்பூர் போர் நினைவுச்சின்னம்” : “Wake Boarding” செய்த நபருக்கு 4000 வெள்ளி அபராதம்

சிங்கப்பூர் சிவிலியன் போர் நினைவுச் சின்னத்தில் ஏறி அதைச் சேதப்படுத்திய 25 வயது சிங்கப்பூரர் ஸ்டீபன் கோவல்கோவுக்கு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) நீதிமன்றத்தில் 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடந்த ஜூலை 17ம் தேதி அன்று போர் நினைவு பூங்காவில் நீர் சறுக்கு விளையாடியதாக கூறப்படும் சிங்கப்பூரைச் சேர்ந்த 24 வயது நபர் கடந்த செப்டம்பர் 13ம் தேதியில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

தேசிய நினைவுச் சின்னத்தில் வேண்டுமென்றே தலையிட்டதற்காக, நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 22ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று சிங்கப்பூர் காவல்துறை மற்றும் தேசிய பாரம்பரிய வாரியம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அப்போது தெரிவித்தது. கடந்த ஜூலை 18ம் தேதி அன்று இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிக்கை கிடைத்ததாக ஏஜென்சிகள் தெரிவித்தன. 18 முதல் 24 வயதுக்குட்பட்ட மற்ற நான்கு நபர்களும் இந்தச் செயலில் ஈடுபட்டதற்காக விசாரிக்கப்படுகிறார்கள். “தேசிய நினைவுச் சின்னங்கள் நமது பாரம்பரியத்தின் முக்கிய அடையாளங்கள் மற்றும் சிங்கப்பூரின் வரலாற்றில் முக்கிய மைல்கற்களை முன்னிலைப்படுத்துகின்றன” என்று ஏஜென்சிகள் மேலும் கூறுகின்றன:

“சிவில் போர் நினைவுச் சின்னம், ஜப்பானிய ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த சின்னங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். எங்கள் தேசிய நினைவுச்சின்னங்கள், குறிப்பாக போர் நினைவுச்சின்னங்கள் மற்றும் அவமரியாதை செயல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவல்கோவ் தனது கோப்ரோ கேமரா மூலம் வேக்போர்டிங் செய்வதற்கான தனது முயற்சிகளையும் பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த வீடியோக்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டன என்று டிபிபி கோ கூறினார்.

Related posts