TamilSaaga

சிங்கப்பூர் Fajar சாலை குடியிருப்பில் பயங்கர தீ.. வீட்டிற்குள் மயங்கிய நிலையில் கிடந்த 14 பூனைகள்.. வாயில்லா ஜீவன்களை காக்க களமிறங்கிய SCDF

சிங்கப்பூரில் Fajar சாலையில் உள்ள HDB யூனிட்டின் இரண்டாவது தளத்தில் நேற்று ஏப்ரல் 21ம் தேதி காலை தீ விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) காலை 8:30 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

SCDF அளித்த தகவலின்பட, இந்த தீ விபத்து அந்த வீட்டின் சர்வீஸ் யார்டில் இருந்து பரவியதாக கூறியுள்ளது. SCDF அந்த வீட்டிற்குள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது அங்கு 14 பூனைகள் சுயநினைவற்ற நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ந்துள்ளனர்.

சற்றும் தாமதிக்காக SCDF குழுவில் இருந்த சிலர், அந்த பூனைகளுக்கு CPR எனப்படும் செயற்கை சுவாசம் அளிக்க துவங்கினார். 13 பூனைகள் பத்திரமாக காப்பாற்றப்பட்ட நிலையில் ஒரு பூனை மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்தது.

சிங்கப்பூர் SCDF வெளியிட்ட பதிவு

சிங்கப்பூர்.. கழிவறையில் இளம்பெண்ணை ஆபாசமாக படமெடுத்த இந்திய தொழிலாளி.. போனை சோதித்ததில் அதிர்ந்து போன போலீஸ் – சிங்கை சிறையில் பிரசாந்த்!

தீ பற்றி எறிந்த வீட்டில் பூனைகளை தவிர வேறு யாரும் இல்லாதது உறுதி செய்யப்பட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ உருவான வீட்டிற்கு அருகில் இருந்த சுமார் 20 பேர் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

“சிங்கப்பூர் வாழ் புலம்பெயர் தொழிலாளர்கள்.. PCP மூலம் 2 வெள்ளி கட்டணத்தில் மருத்துவ ஆலோசனை – MOM வெளியிட்ட Latest Update

இந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த SCDF பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தீ எப்படி பரவியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது என்றும் SCDF தெரிவித்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts