TamilSaaga

“க்ளெமெண்டி வனப்பகுதியில் சிக்கிய இளைஞர்” – விரைந்து சென்று காப்பாற்றிய SCDF

சிங்கப்பூரில் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) தேசிய தினத்தன்று (ஆகஸ்ட் 9) க்ளெமெண்டி வனப்பகுதியில் இருந்து காயமடைந்த இளம்வயதுடைய மலையேற்ற வீரரை பெரும் இக்கட்டில் இருந்து மீட்டுள்ளனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட துணை மருத்துவர்களும் தீயணைப்பு வீரர்களும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த வாலிபர் தனது பெற்றோருடன் வனப்பகுதியில் இருந்தபோது அவர் சதுப்பு நிலப்பரப்பில் சறுக்கியதாகவும், அவரது இடது கால் இரண்டு தடிமனான வேர்களுக்கு இடையில் சிக்கியதாகவும் கூறினார்கள்.

சிங்கப்பூர் தேசிய தினத்தன்று மாலை 6.10 மணிக்கு SCDF உதவிக்கான அழைப்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. புக்கிட் படோக் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீ அணைப்பு வாகனம் மற்றும் கிளெமென்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு, மஜூ கேம்பிற்கு எதிரில் உள்ள நுழைவாயிலில் உள்ள காட்டை வந்தடைந்தன.

மீட்புக் குழுவினர் காட்டுக்குள் நுழைந்து சுமார் 900 மீட்டர் தொலைவில் இருந்த அந்த குடும்பத்தின் இருப்பிடத்தை அடைய கரடுமுரடான நிலப்பரப்பு வழியாக சுமார் 20 நிமிடங்கள் நடந்தனர். மீட்பு கருவிகளை கொண்டு அந்த வாலிபர் சுலபமாக மீட்கப்பட்டார். அவர் முழங்காலில் அடிபட்டிருந்த நிலையில் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related posts