TamilSaaga

மாணவர்களுக்கான VIVA VOCE தேர்வு.. கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

சிங்கப்பூர் கல்வி அமைச்சகமும் தேர்வுகளின் மதிப்பீட்டு கழகமும் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த ஆண்டு தேசிய அளவில் நடைபெற உள்ள தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டு மற்றும் பொதுக்கல்வி சான்றிதழுக்கான Viva Voce தேர்வுகளை கொரோனா சூழலில் பாதுகாப்பான முறையில் நடத்திட சில நடவடிக்கை வழிமுறைகளை கூறியுள்ளன.

நேர்முக வாய்மொழித் தேர்வின் போது எளிதில் தொற்று பரவும் அபாயம் இருக்கும் காரணத்தால் மாணவர்கள் மற்றும் தேர்வாளர் இருவரும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முகக்கவசத்தை (Surgical Mask) பயன்படுத்த வேண்டும்.

முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் தேர்வினை நடத்த வேண்டும் என்பதால், மாணவர்களின் பதில் சத்தமாக தேர்வாளருக்கு கேட்காவிட்டால் அதற்காக மதிப்பெண் குறைப்பு நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களை சத்தமாக பேச சொல்லி அறிவுறுத்தலாம்.

தேர்வில் மாணவர்களின் முகத்தின் பாவனைகளுக்கு எந்தவித மதிப்பெண்ணும் இல்லை என்பதால் முகக்கவசம் அணிவதில் சிக்கல் ஏதும் இல்லை.

இதனை தவிர்த்து தேர்வுக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.

தேர்வு நடக்கும் தேர்வு அறைகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு காற்றோட்டம் மிக்கதாகவும் மாணவர்கள் வெளியேறும் நேரம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts