TamilSaaga

S-pass அல்லது Work permit pass கிடைக்கவில்லையா? இந்த TEP இருந்தால் போதும் நீங்கள் சிங்கப்பூர் வரலாம்!

எந்தவிதமான பயிற்சியும், தனிப்பட்ட துறையின் திறன்கள் இல்லை என்றாலும், நீங்கள சிங்கப்பூருக்கு வந்து பணியாற்றவும், படிக்கவும் பயிற்சி பெறவும் முடியும். இந்த ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (TEP) மூலம். சிங்கப்பூருக்கு வேலைக்கு வர விரும்புவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இதன் மூலம் குறைந்தபட்சம் ஆறு மாதம் நீங்கள் சிங்கப்பூரில் பயிற்சி பெறலாம் பின்னர் STVP மூலம் நீங்கள் இங்கு வேலை பெற முடியும். (உங்கள் அலுவலர்களின் உதவியுடன்)

யார் இந்த ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (TEP) பெற தகுதியானவர்

ஒரு நிறுவனத்தின் முதலாளியாக நீங்கள் பின்வரும் தகுதியுள்ள நபர்களுக்கு ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (TEP) விண்ணப்பிக்கலாம்.

  1. உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுந்த தொழிலாளிகளை வெளிநாட்டிலிருந்து, சிங்கப்பூருக்கு வந்து பயிற்சி பெற அனுமதி பெறலாம் .
  2. வெளிநாட்டில் இருந்து வந்து சிங்கப்பூரின் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இந்த ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (TEP) விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (TEP) ஆறு மாதம் வரை செல்லுபடி ஆகும்.

ஒரு நிறுவனத்தின் முதலாளியாக நீங்கள் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளிகளை அல்லது மாணவர்களை இந்த கோட்டாவின் மூலம் வரவழைக்கிறீர்கள் என்றால், பின்வரும் குறிப்புகளை கவனத்தில் கொள்க

உங்கள் துறைக்கான அடிப்படை அடுக்கு, அதிக திறன் கொண்ட மாதாந்திர வெளிநாட்டு தொழிலாளர் வரியை நீங்கள் செலுத்த வேண்டும்.

உங்கள் நிறுவனத்திற்கு எத்தனை ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (TEP) தொழிலாளிகளை எடுக்கப் போகிறீர்கள் என்பது உங்கள் நிறுவனத்தின் வெளிநாட்டு தொழிலாளிகள் ஒதுக்கீடு பொருத்தே அமையும்.

தொழிலாளர்கள் பெறும் ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (TEP) ஆறு மாதத்திற்கு பிறகு, அதாவது அது முடிவடையும் சமயத்தில் நீங்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் மாணவர்களுக்காக ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் அப்ளை செய்பவர்கள் ஆறு மாத மட்டுமே அதை உபயோகப்படுத்த முடியும் அதற்கு மேல் அது செல்லுபடி ஆகாது ( மாணவர்களாக).

எந்தெந்த தொழிலாளிகளுக்கு நீங்கள் ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (TEP) விண்ணப்பிக்கிறீர்களோ அவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் தடுப்பூசி சான்றிதழ்களை தாங்களே அளிக்க வேண்டும்.

அதற்கு உண்டான ஏற்பாடுகளை தாங்கள் தொழிலாளர்களுக்கு செய்து, குறித்த மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (TEP) விண்ணப்பிக்க தாங்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

யார் யார் இந்த ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் விண்ணப்பிக்கலாம்?

  1. வெளிநாட்டு மாணவர்களுக்கு
    சிங்கப்பூரில் பெறும் பயிற்சி, உங்கள் படிப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
    நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயில வேண்டும் அல்லது உங்களுடைய மாத வருமானம் குறைந்தபட்சம் $ 3000 டாலர்களாக இருக்க வேண்டும்.
  2. வெளிநாட்டு அலுவலகத்தில் பயிற்சி பெறுபவர்
    உங்களுடைய மாத வருமானம் குறைந்தபட்சம் $ 3000 டாலர்களாக இருக்க வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்ட நிபந்தனைகள் உங்களுக்கு சரி வரவில்லை எனில் நீங்கள் ஒர்க் ஹாலிடே புரோகிராம் (WHP) அல்லது ட்ரைனிங் ஒர்க் பர்மிட்(TWP), இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதன் மூலம் சிங்கப்பூருக்கு வரலாம்.

ட்ரெயினிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸை (TEP) பெற சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

ட்ரெயினிங் எம்ப்ளாய்மெண்ட் பாசை (TEP) பெற கீழ்காணும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் சில குறிப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

  1. விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டின் தனிப்பட்ட விவரங்கள் பக்கம். அதில் ஏதேனும் மாற்றங்களின் இருப்பின், அதற்குண்டான விளக்கக் கடிதம் மற்றும் துணை ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
  2. பெறப்போகும் பயிற்சியின் முழு அட்டவணையும், எங்கு, எப்பொழுது என்ற தகவல்களுடன் முறையாக வழங்க வேண்டும்.

ட்ரைனிங் எம்ப்ளாய்மென்ட் பாஸை (TEP) விண்ணப்பிக்கும் நபரின் கல்வி தகுதி மற்றும் நம்பகத்தன்மையை அவர்களை எடுக்கும் முதலாளிகளின் பொறுப்பு.

குறிப்பு:

  1. நோட்டரி பப்ளிக் மூலம் சான்றளிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள்
  2. பள்ளிகளில் கொடுக்கப்படும் கடிதங்கள்

இவை சரிபார்ப்பு ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா

எப்படி, எங்கு விண்ணப்பிப்பது?

நீங்கள் ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸை (TEP) விண்ணப்பிக்க வேண்டுமாயின் MOM இணையதளத்தை பார்க்கவும்.

  1. விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கும் போது $105 கட்டணம் செலுத்த வேண்டும்.
  2. உங்களுக்கு ட்ரைனிங் எம்ப்ளாய்மென்ட் பாஸ் (TEP) வழங்கப்படும் போது $225 கட்டணம் செலுத்த வேண்டும்.
  3. மேலும் $30 ஒவ்வொரு Multiple Journey Visa – க்கும் கட்டணம் செலுத்த வேண்டும்

நீங்கள் முறையாக கட்டணம் செலுத்திய பிறகு உங்களுடைய ஆவணங்கள் சரி பார்த்து, மேலும் உரிய செயல்முறைகள் நடத்தப்பட்டு இந்த ட்ரெயினிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (TEP) கிடைப்பதற்கு மூன்று வாரங்கள் எடுக்கலாம். இன்னும் சில சேவைகளுக்கு, அதாவது அப்பாயின்மென்ட் புக் செய்ய, உங்களுடைய விண்ணப்ப நிலையை அறிய MOM இணையதளத்தை பார்க்கவும்.

EP eService என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் மற்றும் உங்களுடைய ஆவணங்களை கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம்.

பதிவு செய்த பிறகு மூன்று வாரத்துக்குள் உங்களுக்கு ஈமெயில் வரும். உங்களிடம் இருந்து வேறு ஏதேனும் சப்போட்டிங் ஆவணங்கள் வேண்டுமாயின் ஈமெயிலில் குறிப்பிடப்படும். இல்லையெனில் உங்கள் பாசின் நிலை அதில் தெரிவிக்கப்படும்

ட்ரெயினிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸை (TEP) பெற, பின்வரும் தகவல்கள் உங்களுக்குத் தேவைப்படும்:

  1. விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் விவரங்கள்
  2. விண்ணப்பதாரரின் சிங்கப்பூர் தொடர்பு விவரங்கள்
  3. விண்ணப்பதாரரின் தற்போதைய STVP அல்லது குடிவரவு பாஸ் விவரங்கள்.
  4. விண்ணப்பதாரரின் சிங்கப்பூர் குடியிருப்பு முகவரி, நீங்கள் பாஸ் வழங்குவதற்கு வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  5. விண்ணப்பதாரரின் பாஸை பெற சிங்கப்பூர் குடியிருப்பு அல்லது அலுவலக முகவரி.
  6. பாஸை பெற 3 அங்கீகரிக்கப்பட்ட பெறுநர்களின் விவரங்கள் (அவர்களின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் NRIC எண் / FIN / பாஸ்போர்ட் எண்)

இந்த ஆவணங்களின் PDF நகல்களையும் நீங்கள் பதிவேற்ற வேண்டியிருக்கலாம்:

  1. சிங்கப்பூருக்கு வந்த தேதியைக் காட்டும் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் பக்கம்
  2. பூர்த்தி செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை படிவம் அல்லது மருத்துவ அறிக்கை படிவம்
  3. அங்கீகரிக்கப்பட்ட மனித வளப் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு நிர்வாகப் பதவியை வகிக்கும் பணியாளர் கையொப்பமிட வேண்டும்.

ட்ரெயினிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் ரத்து செய்ய

நீங்கள் உங்களுடைய தொழிலாளிகளின் பாசை ரத்து செய்ய வேண்டுமாயின் EP eService என்ற இணையதளத்தை அணுகவும். நீங்கள் ரத்து செய்ய குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம். காலாவதியாக பாசை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ட்ரைனிங் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் முடிவடைந்த பிறகு யாரும் சிங்கப்பூரில் தங்க அனுமதி இல்லை. மீறி தங்கினாள் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும் (TEP) ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்ற நிறுவனங்களின் பட்டியலை mom இணையதளத்தை பார்க்கவும்.

Related posts