சிங்கப்பூர் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 2,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் என்று பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB-Economic Development Board) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (பிப் 18) தெரிவித்துள்ளது.
இந்த வேலைகளில் ஆபரேட்டர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் கார்ப்பரேட் பதவிகளும் அடங்கும் என்று EDB நிர்வாக துணைத் தலைவர் Cindy Koh சிங்கப்பூர் ஏர்ஷோ 2024 க்கான செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் சிங்கப்பூரில் 130 க்கும் மேற்பட்ட ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் இருப்பதாகவும், அதில் 10 வேலைகளில் ஏழு உள்ளூர் மக்களால் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார். இந்த புதிய பணியமர்த்தல் கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் ஏரோஸ்பேஸ் நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு, சிங்கப்பூரின் ஏரோஸ்பேஸ் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 16 சதவீதம் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏரோஸ்பேஸ் துறையில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (எம்ஆர்ஓ) பிரிவில், சிங்கப்பூரின் வளர்ச்சியானது ஒரு வருடத்தில் உலகளாவிய உற்பத்தி மீட்டெடுப்பு வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது.
மேலும் இது தொடர்பாக ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் பணியமர்த்துதலை அதிகரித்துள்ளன, மொத்த ஏரோஸ்பேஸ் வேலைவாய்ப்பில் கிட்டத்தட்ட 3,000 வேலைகளை அதிகரித்துள்ளன.
கடந்த 2022 இல் நடந்த கடைசி விமானக் காட்சிக்குப் பிறகு, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு, சிங்கப்பூரில் S$750 மில்லியனுக்கு (US$556 மில்லியன்) முதலீடு செய்ய பல ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் முக்கிய ஒப்பந்தங்களைச் செய்துள்ளன
இதில் சாங்கி விமான நிலையத்தில் ஒரு புதிய $170 மில்லியன் முதலீட்டில் 84,000 சதுர மீட்டர் விமானப் பராமரிப்பு வசதியை உருவாக்க இருக்கும் சிங்கப்பூர் டெக்னாலஜி இன்ஜினியரிங் (ST Engineering) திட்டங்களும் அடங்கும். மேலும் விமான எஞ்சின் தயாரிப்பாளரான Pratt & Whitney அதன் சிங்கப்பூர் எஞ்சின் மையத்தின் திறனை 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் ஏரோஸ்பேஸ் நிறுவனங்களின் இந்த புதிய திட்டங்கள் மேம்பட்ட உற்பத்தி மற்றும் எம்ஆர்ஓ, புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது, மேலும் சில திட்டங்கள் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஏர்ஷோவின் போது அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், சிங்கப்பூரில் ஏரோஸ்பேஸ் துறை வளர்ச்சி பிரகாசமாக உள்ளதாகவும், பல நிறுவனங்கள் சிங்கப்பூரில் முதலீடு செய்து வளர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிங்கப்பூர் இந்த வாரம் தனது வருடாந்திர விமான கண்காட்சியை ( பிப் 20- 25) நடத்துகிறது, இதில் முக்கிய விண்வெளி துறை வீரர்கள் தங்கள் சமீபத்திய விமானங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏர்ஷோவில், ST Engineering வடிவமைத்துள்ள புதிய டெரெக்ஸ் காலாட்படை சண்டை வாகனம் ( New Terrex Infantry Fighting Vehicle) காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்காணிப்பு ஆப்டிகல் ரேடார்” போன்ற செயற்கை நுண்ணறிவுடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது இலக்கு இடங்கள் மற்றும் தூரங்களைக் கண்டறிந்து திட்டமிட இயந்திர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக காட்சிக்கு வைக்கப்பட இருக்கும் மற்றொரு கண்டுபிடிப்பானது, ST இன்ஜினியரிங் மூலம் உருவாக்கப்பட்ட “உலகின் முதல் “40மிமீ குறைந்த வேகம் கொண்ட தானியங்கி கையெறி ஏவுகணை ஆகும். இந்த லாஞ்சர் முக்கியமாக இராணுவப் பயன்பாட்டிற்காக அல்லாமல், கலவரக் கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ST Enginnering நிறுவனத் தலைவர் Mr Chua Jin Kiat தெரிவித்துள்ளார்.