TamilSaaga

சிங்கப்பூர் வந்தது ஒரு கட்டிட தொழிலாளியாக.. ஆனால் இன்று சிங்கையில் 7 கடைகளுக்கு சொந்தக்காரர் – மனிதவள அமைச்சகமே “வியந்து பாராட்டிய தமிழர்”

சொந்த ஊரை விட்டு இந்த சிங்கை மண்ணை நம்பி வந்த எவரும் வீண்போனதில்லை என்பதை நிரூபித்த மனிதர்கள் பலர். அந்த வகையில் தான், ஒரு சாதாரண வெளிநாட்டு ஊழியராக சிங்கப்பூருக்கு வந்து இன்று சிங்கப்பூரிலேயே 7 மளிகை கடைகளுக்கு முதலாளியாக மாறியுள்ளார் ஒரு சிங்க தமிழர். அவரை பற்றிய சிறு தொகுப்பினை நமது சிங்கப்பூர் செல்ல நீங்களாக டிக்கெட் புக்கிங் பண்ணாதீங்கள்.. அவசரப்பட்டா பணம் வீணாய் தான் போகும் – “Entry Approval”-ஐ எந்த ஏர்லைன்ஸும் இதுவரை நீக்கவில்லை!

ராம மூர்த்தி, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் வந்த அவர் ஒரு கட்டுமான நிறுவனத்தில் சாதாரண புலம்பெயர்த்தொழிலாளராக தனது வாழ்க்கையை நமது சிங்கப்பூரில் துவங்கினர். காலம் நகர்ந்தது அவர் உழைப்பு அவரை உயர்த்தியது. அவருடைய அந்த அயராத உழைப்பால் இன்று சிங்கப்பூரில் 7 மளிகை கடைகளை சொந்தமாக நடத்தி வருகின்றார். கூடுதல் சிறப்பாக அந்த 7 கடைகளில் இரு கடைகளை தன்னை போல சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் வசதிக்காக பொழுதுபோக்கு மையங்களில் திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2005ம் ஆண்டு முதல் சுமார் 12 ஆண்டுகளாக மூர்த்தி தனது சம்பளத்தில் ஒரு தொகையை சேர்த்துவைத்து வந்துள்ளார். தனது அயராத உழைப்பால் ஒரு கட்டத்தில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் உதவியுடன் ஒரு மினிமார்டை (Minimart) லிட்டில் இந்தியாவில் திறந்துள்ளார். துணித்து தான் வேலை செய்துவந்த கட்டுமான தொழிலில் இருந்து விலகி இன்று சிங்கப்பூரில் 7 கடைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் மூர்த்தி.

அடிமட்டத்தில் இருந்து வளர்ந்த மூர்த்தி தான் கடந்து வந்த பாதையை மறந்துவிடவில்லை, இன்றளவும் தன்னை போல சிங்கப்பூர் வரும் புலப்பெயர்ந் தொழிலாளர்களுக்கு உதவி வருகின்றார். கடந்த ஆண்டு நடந்த சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் போன்ற கொண்டாட்ட நிகழ்வுகளின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம் தனது அன்பை அவர் வெளிப்படுத்தி வருகின்றார். லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கத்தின் (LISHA) செயற்குழு உறுப்பினராக இருக்கும் அவர், கடந்த செப்டம்பரில் தொழிலாளர்கள் மீண்டும் சமூகத்தை அணுகிய அந்த பைலட் திட்டத்திலும் பல உதவிகளை செய்துள்ளார்.

“தோனி முதல் சிவகார்த்திகேயன் வரை” அணியும் ‘Balmain’ பிராண்ட் டிரஸ்… அப்படி என்னதான் இந்த டிரஸ்-ல இருக்கு? சிங்கப்பூரில் தலைசுற்ற வைக்கும் விலை!

நீங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்ய காரணம் என்ன என்று கேட்டபோது. “நானும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொழிலாளராகத்தான் இங்கு வந்தேன்”, ஆகவே அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை நான் அறிவேன்”, அதனால் தான் என்னை இயன்றதை அவர்களுக்கு இப்பொது திருப்பிசெய்கிறேன்” என்றார் அவர். உண்மையில் எவரும் உழைத்தால் உயர்ந்திடலாம் என்பதை நிரூபித்துக்காட்டியவரே நம்ம ராம மூர்த்தி.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts