TamilSaaga

“தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள்” : வரவேற்க தயாராகும் சிங்கப்பூர் – அமைச்சர் தகவல்

சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களை இந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் நாட்டிற்குள் அனுமதிக்கும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மனிதவள அமைச்சகம் அக்டோபர் 15 முதல் தடுப்பூசி போடப்பட்ட பணிப்பெண்களுக்கான புதிய நுழைவு விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கும் என்று நாடாளுமன்ற கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் அமைச்சர்.

இருப்பினும், பொது சுகாதார காரணங்களுக்காக நுழைவு ஒப்புதல்கள் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படுவதால், வீட்டுப் பணியாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகலாம், மேலும் இது பெருந்தொற்று சூழ்நிலையை சார்ந்து இருக்கும் என்றார் அவர். “இப்பகுதியில் நிலைமை மேம்பட்டால், நாங்கள் மேலும் பல நுழைவு ஒப்புதல்களை அளிக்கலாம்,” என்று அவர் கூறினார். மேலும் கடந்த மே மாதத்தில் சிங்கப்பூருக்குள் ஏற்கனவே உள்நுழைவு அனுமதி ஒத்திவைக்கப்பட்ட வீட்டுப் பணியாளர்களின் விண்ணப்ப மறுசீரமைப்பை மனிதவள அமைச்சகம் (MOM) முடித்துள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்கள் நுழைய முடியும் என்றும் டாக்டர் டான் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் (WP-Hougang) “சிங்கப்பூர் குடும்பங்களுக்கான தற்போதைய காத்திருப்பு நேரத்தை அவசரமாகக் குறைக்க சிங்கப்பூரில் அதிக பணிப்பெண்களை அனுமதிக்க அரசாங்கம் “அவசர நடவடிக்கைகளை” எடுக்குமா என்று எழுப்பிய ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்தபோது. “அவசர மற்றும் மிகவும் சவாலான பராமரிப்பு தேவைகளைக் கொண்ட வீடுகளுக்கு, குறிப்பாக நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்” என்று டாக்டர் டான் கூறினார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பால் “அவசரமாக” வீட்டு உதவியாளர்கள் தேவைப்படும் குடும்பங்கள் பரிசீலிக்கலாம் என்று டாக்டர் டான் கூறினார். வீட்டுத் தொழிலாளர்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யத் தொடங்கப்பட்ட இந்த வணிக முயற்சியின் கீழ், சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்பு கூடுதல் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளைச் செயல்படுத்த அதன் வெளிநாட்டு வணிகப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுகிறது சிங்கப்பூர்.

இந்த பைலட் திட்டம் இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பணிப்பெண்களை உள்ளடக்கியது, என்று ஜூலை மாத அறிவிப்பில் மனிதவள அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் எந்தெந்த நாடுகளில் இருந்து பணியாளர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சகம் இன்னும் குறிப்பிடவில்லை.

Related posts