TamilSaaga

சிங்கப்பூரில் மேலும் இரு பணியிட மரணங்கள்.. ஒரு இந்திய தொழிலாளி உள்பட இருவர் பலி – 12 நாட்கள் உயிருக்கு போராடிய நிலையில் ஏற்பட்ட சோகம்

சிங்கப்பூரில் உள்ள ஒரு புனரமைப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கடந்த மே 2 அன்று கெயிலாங்கில் உள்ள கடைவீதியில் False Ceiling பலகையில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 22 அன்று, 32 வயதான இந்திய நாட்டவர், தனா மேரா கடற்கரை சாலையில் உள்ள ஒரு பணியிடத்தில் ஓய்வெடுக்கும் இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது வாகனம் ஏறிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த வியாழன் அன்று (மே 5) அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் மேலும் ஒரு விபத்து குறித்த புதிய விவரங்கள் நேற்று செவ்வாயன்று மனிதவள அமைச்சகத்தால் (MOM) பகிர்ந்து கொள்ளப்பட்டன. H&T புதுப்பித்தல் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் ஒரே உரிமையாளராக இருந்த அந்த சிங்கப்பூரர் (வயது 66), கடையின் இரண்டாவது மாடியில் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அப்போது False Ceiling முறிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, அந்த நபர் சுமார் 4 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக MOM செய்தி வெளியிட்டுள்ளது. டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்தார், மேலும் அதே இரவில் அவர் இறந்தார் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் பிரபல Discothequeயில் நடந்த தகராறு.. இரண்டே நாளில் 5 பேரை “ஸ்கெட்ச் போட்டு தூக்கிய” சிங்கை போலீசார் – தொடரும் விசாரணை

எந்தவொரு தரையையும் அகற்றுவதற்கு முன் பொதுவாக எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும். ஆனால் இந்த சம்பவத்தில் அது எடுக்கப்படவில்லை என்றும் MOM மேலும் தெரிவித்தது.

அதே போல 32 வயதான இந்தியப் பிரஜை ஒருவர், ஹூண்டாய் இன்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷனால் இயக்கப்படும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட தளத்தில் உள்ள ஓய்வறையை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு வாகனம் அவர் மீது மோதியதாக MOM தெரிவித்தது.

குழந்தை மனசு கொண்ட திருடன் போல.. சிங்கப்பூரில் பொம்மை கடையில் திருடிய “வினோத திருடன்” – CCTV காட்சிகளை வெளியிட்டு ஆளை தேடும் நிறுவனம்

ஸ்விஃப்ட் டீம் இன்ஜினியரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த தொழிலாளி, உடனடியாக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு ஆவர் பல அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழன் அன்று அவர் இறந்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts