வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பெரும்பாலும் ஏங்கும் ஒரே விஷயம் என்னவென்றால் அது கண்டிப்பாக சாப்பாடாக தான் இருக்கும். என்னதான் குடும்பத்தை நினைத்து வருத்தம் இருந்தாலும் மூன்று வேளை வயிற்றுக்கு சாப்பிடுதானே வேண்டும். ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும் பொழுதும் இதை சாப்பிட வேண்டும், அதை சாப்பிட வேண்டும் என்று அம்மாவிடமும்,. மனைவியிடமும் ஆர்டர் செய்துவிட்டு வீட்டிற்கு வரும் நபர்கள் இங்கு ஏராளம்.
உண்மையில் நீங்கள் அப்படி ஏங்குபவராக இருந்தால் உங்களுக்கான புரட்டாசி விருந்து சிங்கப்பூரில் காத்திருக்கின்றது. ஆம் வெளிநாட்டில் வாழும் அனைத்து ஊழியர்களையும் புரட்டாசி ஞாயிறு அன்று மதிய விருந்திற்கு அன்புடன் அழைப்பதாக ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அழைப்பு விடுத்துள்ளது. செரங்கூன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி மதியம் 11 மணி முதல் 2 மணி வரை பக்தர்களுக்கு புரட்டாசி மதிய விருந்து கொடுக்கப்படும் என அன்புடன் தெரிவித்துள்ளது. எனவே, சிங்கப்பூரின் தமிழ் தோழர்கள் இந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்