கடந்த வாரம் சிங்கப்பூரில் சட்ட விரோதமாக பணிபுரிந்து சிக்கிய வெளிநாட்டினர் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து உணவு டெலிவரி ரைடர்களாக சட்டவிரோதமாக பணிபுரியும் வெளிநாட்டினர் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலானது. அதில் உள்ளூர் உணவு டெலிவரி ரைடர் ஒருவர், ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் வெளிநாட்டவரைத் திட்டும் காட்சிகள் அதில் இடம்பெற்று இருந்தது. வெளிநாட்டவர் ஒருவர் ஃபுட் பாண்டாவில் டெலிவரி செய்பவராக சட்டவிரோதமாக வேலை செய்ததாக உள்ளூர் நபர் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் வெளிநாட்டவர் கண்ணீருடன் வெளியேறி விடுமாறு கெஞ்சினார்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்ட Services2030… புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் 1 லட்சம் வேலைவாய்ப்புகள்… தமிழர்களுக்கும் வாய்ப்பா?
உள்ளூர் உணவு டெலிவரி தளங்கள் உணவை வழங்குவதற்கு உள்ளூர் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களை மட்டுமே பணியமர்த்த முடியும். கிராப் ஃபுட், ஃபுட்பாண்டா அல்லது டெலிவரூ போன்ற தளங்களில் வெளிநாட்டினர் உணவை வழங்குவது சட்டவிரோதமானது என்றும் MOMன் இணையதளம் கூறுகிறது.
MOM இந்தச் சிக்கலை விசாரித்து வருவதாகவும், உள்ளூர் டெலிவரி செய்பவர்கள் தங்கள் டெலிவரி கணக்குகளை அங்கீகாரம் இல்லாமல் வேறு நபர்களுக்கு மாற்றியிருக்கிறார்களா என்று பார்த்து வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்கு TWP பாஸ்… அப்ளே செய்ய என்னென்ன Documents… இத்தனை மாதங்கள் தான் வேலை… இத தெரிஞ்சிக்கோங்க லைஃப் செட்டில்!
தங்கள் உணவு டெலிவரி ஊழியர்களின் கணக்குகளை அனுமதியின்றி மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறார்களா என்பதை மேலும் புரிந்து கொள்ள அதிகாரிகள் உணவு விநியோக தளங்களைத் தொடர்புகொண்டுள்ளனர்.
வொர்க் பெர்மிட் அனுமதி இல்லாமல் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் இரண்டு ஆண்டுகள் சிறை, $20,000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று MOM கூறி இருக்கிறது. அவர்கள் மீண்டும் சிங்கப்பூரில் பணிபுரிய தடையும் விதிக்கப்படலாம்.