TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு TWP பாஸ்… அப்ளே செய்ய என்னென்ன Documents… இத்தனை மாதங்கள் தான் வேலை… இத தெரிஞ்சிக்கோங்க லைஃப் செட்டில்!

சிங்கை வேலைக்காக தேடி அலையும் பல இளைஞர்களுக்கு பெரிதாக இருக்கும் ஆசையே நல்ல சம்பளத்தில் வெளிநாடுகள் ஒன்றில் செட்டில் ஆகி விட வேண்டும் என்பதே. அதிலும் அந்த வெளிநாடு லிஸ்ட்டில் முதலாவதாக இருக்கும் நாடு சிங்கப்பூர் தான். சிங்கையில் பல வருட பாஸ்கள் இருப்பது போல குறைந்த மாத பாஸ்களும் புஅழக்கத்தில் தான் இருக்கிறது. இதில் வேலைக்கு வந்து வேறு வேலை தேடுபவர்களும் இருக்கிறார்கள். சில காலம் வந்து சிங்கப்பூரில் எப்படி வேலை இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு இந்தியா சென்று திரும்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையும் படிங்க: இரண்டு மாத சம்பளம் மட்டுமே ஏஜென்ட் கட்டணம்… சிங்கையில் வேலைக்கு வர இந்த பாஸ் போதும்… சில நாட்களே அப்ரூவல்… இத படிங்க!

அந்த லிஸ்ட்டில் இருக்கும் ஒரு பாஸ் தான் TWP. Training Work Permitல் சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் குறைந்தது 6 மாதங்கள் வேலை செய்யலாம். இந்த பாஸில் ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும் வேலை செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த பாஸில் சிங்கப்பூர் வந்தால் 6 மாதங்கள் தொடர்ந்து உங்களால் வேறு பாஸில் மாறிக்கொண்டு உங்களால் வேலை செய்ய முடியும். இதற்கு ஏஜென்ட் கட்டணமாக 2 லட்சம் வரை கூட கேட்கப்படுகிறது.

TWP பாஸிற்கு கேட்கப்படும் ஆவணங்கள் என்னென்ன…

  • வேலைக்கு வரும் ஊழியரின் பாஸ்போர்ட்
  • உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான உறவு (எ.கா. துணை நிறுவனம், இணை நிறுவனம், கூட்டு நிறுவனம், வாடிக்கையாளர், துணை ஒப்பந்ததாரர்)
  • பயிற்சியின் நோக்கம் மற்றும் காலம்
  • வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பயிற்சியாளரின் வேலைவாய்ப்பு ஒப்பந்தம்
  • கல்வி ஆவணங்கள்
  • வேலை செய்ய இருக்கும் டிபார்ட்மெண்ட் குறித்த தகவல்

இந்த பாஸில் வேலைக்கு வரும் ஊழியர்கள் கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். படிக்காமல் இந்த பாஸில் வரக்கூடாது. TWP ஊழியர்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் எடுக்கப்பட மாட்டாது. இந்த பாஸினை அப்ரூவ் செய்யும் போது 3 மாதத்திற்குள் அப்ரூவல் கிடைத்து விடும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts