TamilSaaga

“சிங்கப்பூர் புங்கோல் பகுதி LRT சேவை” : இன்று காலை ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் புங்கோல் LRT பாதையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 17) காலை சமிக்கை எனப்படும் சிக்னல் கோளாறு காரணமாக சில மணிநேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த கோளாறு சரிசெய்யப்பட்டு சேவைகள் மீண்டும் தொடங்கினாலும், பாதிக்கப்பட்ட நிலையங்களில் வழக்கமான இலவச மற்றும் Bridging பேருந்துகள் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று ரயில் ஆபரேட்டர் SBS டிரான்சிட் மதியம் 12.14 மணிக்கு வெளியிட்ட ஒரு டீவீட்டில் கூறியது.

அதன் பிறகு SBS ட்ரான்சிட் வெளியிட்ட டீவீட்டில் “புங்கோல் LRT சேவைகள் மதியம் 12.04 முதல் மீண்டும் தொடங்கின. வழக்கமான இலவச மற்றும் Bridging பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மிகவும் வருந்துகிறோம்” என்று கூறியுள்ளது.

இந்த LRT-யில் அடிக்கடி பயணம் செய்யும் ஒருவர் கூறும்போது “புங்கோல் LRT ஸ்டேஷனுக்கு எனது பயணம் வழக்கமாக 10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். அப்படியே தாமதமானால் 15 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் என்றும் கூறினார். ஆனால் இன்று நான் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் LRT ரயிலில் சிக்கி என் உடற்பயிற்சி வகுப்பை மிஸ் செய்துள்ளேன்” என்று அவர் கூறினார். “இடையூறின் போது தெளிவான அறிவுறுத்தல்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை – எனது உடற்பயிற்சி ஸ்டுடியோ விடுபட்ட வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிப்பதால் இந்த நிகழ்வு என்னை மிகவும் வரதமடையவைக்கிறது” என்றும் அவர் கூறினார்.

Related posts