TamilSaaga

“சிங்கப்பூரில் மூவரை பலிவாங்கிய Star Engrg நிறுவன தீ விபத்து” : பொது விசாரணை விரைவில் தொடக்கம் – MOM

சிங்கப்பூரின் துவாஸ் பகுதியில் உள்ள Star Engrg நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் வெடிப்பு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட விசாரணைக் குழு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 8 வரை நீதிமன்றத்தில் தனது முதல் கட்ட பொது விசாரணையை நடத்தும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

முதல் கட்ட விசாரணைகள் விபத்துக்கான “காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை” கண்டறிவதில் கவனம் செலுத்தும் என்று மனிதவள அமைச்சகம் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 16) ஆண்டு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் “இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்க பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய “நவம்பர் 15 முதல் நவம்பர் 19 வரை இரண்டாம் கட்ட பொது விசாரணைகள் நடைபெறும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், பிப்ரவரி 24ம் தேதியன்று சிங்கப்பூரின் 32E துவாஸ் அவென்யூ 11ல் உள்ள தொழில்துறை கட்டிடத்தில் இந்த தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்தனர். அவர்களில் மூன்று பேர் தீவிர காயங்களால் சிகிச்சை பலனின்றி இறந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

ஆரம்பகட்ட விசாரணையில் உருளைக்கிழங்கு ஸ்டார்ச் பவுடர் சம்பந்தப்பட்ட “எரியக்கூடிய தூசி வெடிப்பு” காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடித்ததில் இருந்து, MOMன் ஒரு குழு அரசு வழக்கறிஞரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts